
ஓய்வு பெற திட்டம்
இந்த உலகக் கோப்பைதான் தோனிக்கு கடைசி உலகக் கோப்பை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். தோனிக்கு தற்போது உடல் ரீதியாக நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. தோனி நல்ல பார்மில் இருந்தாலும் அவ்வப்போது அவருக்கு மூச்சுத் திணறல் உட்பட சில பிரச்சனைகள் வந்து செல்கிறது. களத்தில் நிற்கும் போதே சமயங்களில் இவர் முதுகு வலி பிரச்சனையால் கூட அவதிப்படுகிறார்.

ஓய்வு பெற போகிறார்
இதனால் இந்த உலகக் கோப்பை தொடர் முடிந்த பின் தோனி ஓய்வு பெற இருக்கிறார். தோனி இந்த உலகக் கோப்பைக்கு பின் ஓய்வு பெறுவதற்கு முக்கியமான திட்டங்களை வைத்து இருக்கிறார் என்கிறார்கள். பெரும்பாலும் செப்டெம்பர் 22ம் தேதி தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்று செய்திகள் வருகிறது.

இன்னொருவர் ஓய்வு
அதேபோல் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஓய்வு பெறுவதற்கான நேரமும் வந்துவிட்டது. அவரின் பயிற்சி காலம் தற்போது உலகக் கோப்பைக்காக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. சரியாக உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் அவரின் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிகிறது. இதனால் இந்திய அணி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய வேண்டும்.

தோனி
அதன்படி எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தோனி இந்திய அணியின் பயிற்சியாளராக வாய்ப்புள்ளது என்கிறார்கள். இப்போதே அவர் இளம் வீரர்களுக்கு களத்தில் பயிற்சி அளித்து வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு அவர் நிறைய ஆலோசனை வழங்கி வருகிறார். இதனால் தோனி பயிற்சியாளராக அதிக வாய்ப்புள்ளது.

தேர்வு
அதேபோல் இந்திய அணியில் புதிய முகங்களை சிஎஸ்கே மூலம் கொண்டு வருவதிலும் தோனி முக்கிய பங்கு வகிக்கிறார். இதனால் இந்திய அணி தேர்விலும் அவர் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை முடிந்த பின் இது தொடர்பான செய்திகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளது .


Click it and Unblock the Notifications