
என்ன விறுவிறுப்பு
இரண்டு அணிகளுக்கு இடையில் நடக்கும் இந்த லீக் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது. இந்தியாவிற்கு எதிராக மொத்தம் 50 ஓவரில் இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்து கலங்கடித்து உள்ளது. அந்த அணியில் பிரைஸ்டோ 111, ஜேசன் ராய் 66, பென் ஸ்டோக்ஸ் 79 ரன்கள் எடுத்தனர். இந்த இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி பொறுமையாக ஆடி வருகிறது.

இந்திய எப்படி
இந்திய அணி சார்பாக களமிறங்கிய கே எல் ராகுல் தொடக்கத்திலேயே அதிர்ச்சி அளித்து டக் அவுட் ஆனார். அதன்பின் கோலி ரோஹித் நிலைத்து நின்று ஆடினார்கள். கோலி 66, ரோஹித் 102 ரன்கள் இருக்கும் போது அவுட்டானார்கள். தற்போது பாண்டியா மற்றும் பண்ட் அதிரடியாக ஆடி வருகிறார்கள்.

என்ன மாற்றம்
சரியாக அணியில் அறிவிக்கப்பட்டபடி பண்ட் 4வது இடத்தில் ஆடி வருகிறார். ஆனால் பாண்டியா இரண்டு இடம் முன்னேறி 5வது இடத்தில் ஆடி வருகிறார். முறைப்படி கோலி அவுட்டான பின் பண்டுடன் சேர்ந்து தோனிதான் களமிறங்கி இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக பாண்டியா களமிறங்கி இருக்கிறார். இது தோனி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

சென்ற போட்டி
சென்ற முறை மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் இப்படித்தான் நடந்தது. அப்போது கோலியுடன் ஆட கேதார் ஜாதவ் களமிறங்கினார். ஆனால் அவர் 7 ரன்களுக்கு அவுட்டானார். இந்த போட்டியில் தற்போது தோனியின் பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டு இருக்கிறது.

ஏன் இப்படி
தோனி தொடர்ந்து நிதானமாக ஆடுவதுதான் இதற்கு காரணம் என்கிறார்கள். அதிக ரன்களை இங்கிலாந்து இலக்காக நிர்ணயித்து இருப்பதால் தோனியை தற்போது கோலி களமிறக்கவில்லை என்கிறார்கள். ஆனால் தோனி இதனால் தன்னை நிரூபிக்க முடியாமால் போகும் என்று அவரது ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications