Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி கையில்தான் எல்லாம் இருக்கிறது.. சென்ற போட்டியில் நடந்த அதே அதிசயம் இன்றும் நடக்குமா?

லண்டன்: நியூஸிலாந்திற்கு எதிராக இன்று நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி எடுக்க போகும் நடவடிக்கைகள், முடிவுகள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கொஞ்சமும் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் போய்கொண்டு இருக்கிறது. எப்போது எந்த மாதிரி முடிவுகள் மாறும், எந்த குட்டி அணி பெரிய அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது.

இதனால் பெரிய அணிகள் மோதிக்கொள்ளும் போட்டிகளில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்தியா நியூசிலாந்து அணிக்குள் இன்று உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் மோதிக்கொள்கிறார்கள்.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

இந்த உலகக் கோப்பை தொடரில் இன்று நடக்கும் போட்டி மிக முக்கியமானது ஆகும். ஏனென்றால் இன்றைய போட்டியில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றால் இந்திய அணிக்கு அது பெரிய உதவியாக இருக்கும். இந்த போட்டியில் இந்தியா வென்றால் 2ம் இடத்தை பிடிக்கும். அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வென்றால் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க முடியும்.

தோனி எப்படி

தோனி எப்படி

ஆனால் இதற்கு தோனியும் கொஞ்சம் உதவ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் கடந்த போட்டியில் கோலிக்கு தோனி செய்த உதவி என்பது போட்டியின் போது பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி வெற்றிபெறுவதற்கு தோனியின் ஐடியா பெரிய அளவில் உதவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்படி முடியும்

எப்படி முடியும்

சென்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. இந்திய அணியில் 4 வது இடத்தில் பாண்டியா களமிறங்கினார். இதற்கு காரணம் தோனியின் ஐடியாதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் கே எல் ராகுலை கடைசி நேரத்தில் இறக்கவும் தோனி முக்கிய காரணமாக இருந்தார்.

பீல்டிங் பவுலிங்

பீல்டிங் பவுலிங்

அதேபோல் அந்த போட்டியில் பவுலர்களை மாற்றி மாற்றி போட வைக்கவும், பீல்டிங்கை சரியாக நிற்க வைக்கவும் கோலிக்கு தோனி பெரிய அளவில் உதவினார். தோனி மட்டுமில்லாமல் ரோஹித் சர்மாவும் கோலிக்கு பெரிய அளவில் ஆலோசனைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றும் நடக்குமா

இன்றும் நடக்குமா

இது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இதனால் இன்றும் அதே போல் ஒரு அதிசய விஷயம் நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது . தோனி கோலிக்கு சரியான நேரத்தில் அறிவுரை வழங்குவாரா என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி வழங்கும் பட்சத்தில் அது போட்டியின் போக்கை பெரிய அளவில் மாற்றும்.

Story first published: Thursday, June 13, 2019, 12:11 [IST]
Other articles published on Jun 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+