Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயிற்சியிலேயே இந்த அடியா? சூதானமா இருங்க தென்னாப்பிரிக்கன்ஸ்.. தோனியின் அதிரடி வீடியோ!

Recommended Video

தோனி பயிற்சி செய்யும் வீடியோ

லண்டன்: இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டு இருக்கிறது.

இங்கிலாந்தில் தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 5 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளில் சில அணிகள் இரண்டு போட்டிகள் கூட விளையாடி முடித்துவிட்டது.

ICC World Cup 2019: Dhonis net practice video becomes viral in social media

ஆனால் இந்திய அணி இன்னும் ஒரு போட்டி கூட விளையாடவில்லை. ஐபிஎல் காரணமாக கொடுக்கப்பட்ட சில அழுத்தத்தால் இந்திய அணியின் போட்டிகள் மிகவும் தாமதமாகத்தான் தொடங்கிறது. இதனால் தற்போது இந்திய அணி விளையாடும் போட்டிகளை ஜூலை 5ம் தேதிதான் தொடங்க உள்ளது.

இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இதனால் இந்த போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது . தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி மூன்றாவது போட்டியில் வெல்லும் முனைப்பில் உள்ளது.

இதனால் தென்னாப்பிரிக்கா வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார். எப்படியாவது இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்று பயிற்சி செய்து வருகிறார்கள்.

அதேசமயம் தற்போது இந்திய வீரர்களும் தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளனர். இன்று இந்திய அணியின் முன்னணி வீரர்கள் எல்லோரும் வலை பயிற்சியில் ஈடுபட்டார்கள். இந்திய அணி சார்பாக கூடுதலாக பயிற்சியின் போது உதவுவதற்காக மூன்று பவுலர்கள் அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார்கள். இவர்களை வைத்து பேட்ஸ்மேன்கள் பயிற்சி செய்து வருகிறார்கள்.

அதன்படி தோனி இன்று 3 மணி நேரம் வலை பயிற்சியில் ஈடுப்பட்டார். வலைப்பயிற்சியில் எப்போது மெதுவாக ஆடி பழகும் தோனி இந்த முறை அதிரடியாக ஆடினார். வரிசையாக 2 பந்துகளை அவர் சிக்ஸர் பறக்கவிட்டார். இதன் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

அதில் ஒரு பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்றதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் நிறைய அதிரடி ஹிட்களை அவரை தொடர்ந்து அடித்து பழகிக் கொண்டு இருந்தார். ஐபிஎல் தொடரில் இருந்தே தோனி நல்ல பார்மில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி ஆட்டத்திலும் அவர் மிகவும் சிறப்பாக ஆடினார். இதனால் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் அவர் அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Story first published: Monday, June 3, 2019, 17:12 [IST]
Other articles published on Jun 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+