மீண்டும் மீண்டும் ஏன் இப்படி.. போதும்.. பொறுமையை சோதித்த தோனி.. ரசிகர்கள் கடும் பாய்ச்சல்!
லண்டன்: இந்திய அணியின் அதிரடி வீரர் தோனி இந்த போட்டியிலும் சொதப்பி இருப்பதால் கடும் சர்ச்சையில் இருக்கிறார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் பொட்டை மிகவும் அதிரடியாக நடந்து வருகிறது. இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மிகவும் அதிரடியாக நடந்து வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்த பிட்சில் சேஸ் செய்வது கடினம் என்பதால் இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

செம
இந்தியா வங்கதேசம் அணிக்கு அதிரடியாக 315 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது. இந்திய அணியில் ரோஹித் சர்மா 104, கே எல் ராகுல் 77 ரன்களை எடுத்து அதிரடி காட்டி இருக்கிறார்கள். தொடக்க வீரர்கள் அதிரடியாக ஆடியது மட்டுமில்லாமல் மிடில் ஆர்டரும் இன்று நன்றாகவே ஆடியது.

தோனி ஏன்
ஆனால் இந்த போட்டியிலும் தோனி சரியாக ஆடவில்லை. தோனி பெரிய அளவில் அதிரடியாக ஆடி ரன்களை குவிக்கவில்லை. எல்லா போட்டியை போலவும் இந்த போட்டியிலும் தோனி மிகவும் மெதுவாகவே ஆடினார். தன்னுடைய ஸ்டிரைக் ரேட்டுக்கு பங்கம் வராமல் விளையாடினார். இதனால் இந்திய அணியின் ரன் ரேட் தொடர்ந்து குறைந்தது.

எப்படி குறைந்தது
ஒரு ஓவருக்கு ஆறு ரன்கள் அடித்தால் போதும் என்ற மனநிலையில்தான் தோனி ஆடினார். இங்கிலாந்து அணிக்கு எதிராக இதேபோல் ஆடி அவர் விமர்சனங்களை சந்தித்தார். இந்திய அணியின் தோல்விக்கும் இதுதான் காரணம் என்று விமர்சனம் வைக்கப்பட்டது. கடந்த ஆப்கானிஸ்தான், மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் தோனி இப்படி விளையாடித்தான் சர்ச்சையில் சிக்கினார்.

எத்தனை ரன்கள்
இதனால் தற்போது ரசிகர்கள் தோனியின் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். தோனி இப்படி கடைசி நேரத்தில் இறங்கி மெதுவாக ஆடுவதை நிறுத்த வேண்டும். இந்திய அணியின் ரன் ரேட்டை இவர் எப்போதும் குறைக்கிறார். இவரால் 350 எடுக்க வேண்டிய போட்டியில் இந்தியா 314 ரன்கள்தான் எடுத்துள்ளது என்று ரசிகர்கள் விமர்சனங்கள் வைத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications