Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் போயிட்டா? நீங்க எடுக்க மாட்டீங்களா? கடுகடுத்த தோனி.. ஒடுங்கிய பவுலர்கள்.. என்ன நடந்தது?

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | சுத்தி சுத்தி அடித்த இந்தியா, பாகிஸ்தான் படுதோல்வி!

லண்டன்: நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முக்கியமாக நேற்று தோனி கோவப்பட்ட சம்பவமும் கூட நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.

நேற்று பாகிஸ்தான் இந்திய அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

இதில் மொத்தம் 50 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. கே எல் ராகுல் 78 பந்துகளில் பொறுமையாக 57 ரன்கள் அடித்தார். ரோஹித் சர்மா மொத்தம் 113 பந்துகளில் 140 ரன்கள் அடித்தார். கோலி 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார்.

எப்படி ஆடியது

எப்படி ஆடியது

அதன்பின் பாகிஸ்தான் வீரர்கள் களமிறங்கி பொறுமையாக ஆடினார்கள். இந்திய அணியின் பவுலிங் இணையான புவனேஷ்வர் குமார், பும்ரா பவுலிங்கில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஒடுங்கிப் போனார்கள். ஒரு ஓவரில் ஒரு ரன் அடிப்பதே பெரிய பிரச்சனையாக இருந்தது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் திணறி வந்தனர்.

பாகிஸ்தானுக்கு லக்

பாகிஸ்தானுக்கு லக்

அப்போதுதான் பாகிஸ்தான் அணிக்கு லக் அடித்தது. புவனேஷ்வர் குமார் ஓவர் போடும் போது காயம்பட்டார். பிட்சில் அவர் சென்று கொண்டு இருக்கும் போதே வழுக்கியதால் காயத்திற்கு உள்ளானார். 5வது ஓவரில் இதனால் 4 பந்துகள் போட்ட அவர் பாதியில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் அவரால் பவுலிங்கை தொடர முடியவில்லை.

மோசம்

மோசம்

அதற்கு அடுத்த பந்தே இமாம் உல் ஹக்கை விஜய் சங்கர் விக்கெட் எடுத்தார். ஆனால் அதற்கு பின் இந்திய அணி பவுலர்கள் பாகிஸ்தான் வீரர்களின் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது. இதனால் எப்போதும் பொறுமையாக இருக்கும் தோனியே பொறுமை இழந்தார்.

கோபம்

கோபம்

இதையடுத்து அவர் குல்தீவ் யாதவ் மற்றும் பாண்டியாவை சந்தித்து நீண்ட நேரம் பேசினார். முக்கியமாக இரண்டு போட்டிகளாக சொதப்பி வந்த குல்தீப் யாதவிடம் கோபமாக தோனி அறிவுரை வழங்கினார். புவனேஸ்வர்குமார் இல்லை என்றால் விக்கெட் விழாதா என்று கோபமாக கேட்டார். 23 வது ஓவரில்தான் தோனி குல்தீப்பை பிடித்து திட்டினார். அதே ஓவரில் குல்தீப் பாபர் ஆஸம் விக்கெட்டை எடுத்தார். அதன்பின் வரிசையாக குல்தீப் பாண்டியா இருவரும் விக்கெட் எடுத்தனர்.

சூப்பர் விக்கெட்

சூப்பர் விக்கெட்

அதன்பின் 25.2 ஓவர் போட்ட குல்தீப் மீண்டும் பாகிஸ்தான் வீரரான பாஹர் ஸமன் விக்கெட்டை எடுத்தார். அதேபோல் பாண்டியா ஆறாவது ஓவரில் ஹபீஸ் மற்றும் சோயப் மாலிக் விக்கெட்டை எடுத்தார். தோனியின் இந்த கோபம் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, June 17, 2019, 10:58 [IST]
Other articles published on Jun 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+