For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மெதுவா மெதுவா.. அப்படியே ஏன் நிக்கிறீங்க.. விஜய் சங்கரை கோபமாக திட்டிய தோனி.. பரபரப்பு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கரை தோனி கோபமாக திட்டிய சம்பவம் பெரிய வைரலாகி இருக்கிறது.

Recommended Video

WORLD CUP 2019 IND VS AFG | விஜய் ஷங்கரை தூக்கியே ஆகணும், பண்ட் ரசிகர்கள் அடாவடி!

லண்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கரை தோனி கோபமாக திட்டிய சம்பவம் பெரிய வைரலாகி இருக்கிறது.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டி கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் மிக மிக விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

முதலில் ஆப்கானிஸ்தானுக்கு சாதகமாக சென்ற போட்டி தற்போது இந்தியாவிற்கு சாதகமாக சென்று கொண்டு இருக்கிறது. அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால் ஆப்கானிஸ்தான் திணறி வருகிறது.

இலக்கு

இலக்கு

இந்த போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் கே எல் ராகுல் 30 ரன்கள், ரோஹித் 1 ரன், கோலி 67, விஜய் சங்கர் 29, தோனி 28, ஜாதவ் 58 ரன்கள் மட்டுமே அடித்தனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மொத்தமாக 50 ஓவர் பிடித்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 224 ரன்கள்தான் எடுத்தது.

மோசம்

மோசம்

விஜய் சங்கர் இந்த போட்டியில் மிக மோசமாக பேட்டிங் செய்தார். 4 வது வீரராக களமிறங்கி பெரிய அளவில் ஏமாற்றம் அளித்தார். இன்று இவருக்கு ஓவரும் வழங்கப்படவில்லை. ஒரு ஓவர் கூட கோலி இவருக்கு வழங்கவில்லை. கூடுதல் பவுலிங் ஆப்ஷன் இல்லாமல் எப்படி இந்திய அணி செயல்படுகிறது என்றும் கோலி இந்த போட்டியில் சோதனை முயற்சியில் இறங்கி உள்ளார்.

செய்தார்

செய்தார்

இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங்கின் போது, ஹஷ்மதுல்லா ஷாகிதி அடித்த பந்து ஒன்று எட்ஜ் ஆகி மேலே பறந்தது. ஷார்ட் தேர்ட் மேன் திசையை நோக்கி பந்து பறந்தது. அப்போது டீப் பேக்வேர்ட் பாயிண்ட் திசையில் விஜய் சங்கர் நின்று கொண்டு இருந்தார். இவர் பெரிய அளவில் முயற்சி செய்து டைவ் எல்லாம் அடித்து இருந்தால் இந்த கேட்சை பிடித்து இருக்கலாம்.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் இவர் எதுவும் செய்யாமல் அங்கேயே நின்றார். பந்து விழுந்த பின்தான் அவர் ஷார்ட் தேர்ட் மேன் திசையை நோக்கி ஓடி வந்தார். இதை பார்த்தும் தோனி கடுப்பானார். முதல்முறை தோனி வெளிப்ப்படையாக விஜய் சங்கரை களத்திலேயே திட்டினார். ஏன் மெதுவா நடக்குற என்பது போல விஜய் சங்கரை பார்த்து சைகை செய்தார். அதன்பின் ஓவர் முடியும் போது அருகே அழைத்து அறிவுரை செய்தார். இந்த சம்பவம் இன்று பெரிய வைரலானது .

Story first published: Saturday, June 22, 2019, 21:35 [IST]
Other articles published on Jun 22, 2019
English summary
ICC World Cup 2019: Dhoni shouts at Vijay Shankar in the match against Afghanistan.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+