போங்க.. தோனி நேற்றே சிக்னல் கொடுத்துவிட்டார்.. தொடர் விமர்சனங்களால் எடுத்த விஸ்வரூப முடிவு!
Recommended Video
லண்டன்: நேற்றைய போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் தோனி நீண்ட நேரம் கீப்பிங் செய்யாமல் இருந்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் அவர் பல முக்கியமான விஷயங்களை ரசிகர்களுக்கு உணர்த்தி உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.
நேற்று இந்தியா மற்றும் வங்கதேசம் இடையில் நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டம் கடைசி வரை மிகவும் விறுவிறுப்பாக சென்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை போட்டியை இந்தியாதான் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது.
கடைசியில் நடந்த 5 திரில் ஓவர்களில் இந்தியா அதிரடியாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோனி நடந்து கொண்ட விதம் நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.

தோனி எப்படி
நேற்றைய போட்டியில் தோனி அதிரடியாக பேட்டிங் செய்யவில்லை என்ற விமர்சனம் உள்ளது. தோனி கடந்த சில போட்டிகளாகவே இந்த விமர்சனத்தில் சிக்கி வருகிறார். மிகவும் மெதுவாக ஆடுகிறார். டெஸ்ட் இன்னிங் ஆடுகிறார் என்று தொடர் விமர்சனங்கள் தோனி மீது வைக்கப்பட்டு வருகிறது.

கீப்பிங் எப்படி
அதேபோல் தோனி செய்யும் கீப்பிங் முறையும் இப்போதெல்லாம் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. தோனி வர வர அதிக பைஸ் ரன்களை விடுகிறார். முன்பை போல துல்லியமாக விக்கெட்டுகளை எடுப்பதில்லை. அதேபோல் தோனி இப்போதெல்லாம் எடுக்கும் டிஆர்எஸ் தோல்வியில்தான் முடிகிறது. இப்படி வரிசையாக தோனி மீது நிறைய புகார்கள் இருக்கிறது.

நேற்று என்ன
இந்த நிலையில்தான் நேற்று போட்டியில் தோனி நீண்ட நேரம் கீப்பிங் செய்யவில்லை.இந்த போட்டியில் முதலில் சில ஓவர்கள் மட்டும்தான் தோனி கீப்பிங் செய்தார். எப்போதும் முழுவதுமாக கீப்பிங் செய்யும் தோனி நேற்று மட்டும் முழுவதுமாக கீப்பிங் செய்யவில்லை. 6 ஓவர்கள் இருக்கும் போதே அவர் பாதியில் களத்தில் இருந்து வெளியேறினார். ஓய்வு எடுப்பதற்காக அவர் களத்தில் இருந்து பாதியில் வெளியேறினார்.

பண்ட் செய்தார்
நேற்று தோனிக்கு பதிலாக பண்ட்தான் கீப்பிங் செய்தார். இந்த நிலையில் தோனி ஓய்வு பெற போகிறார். அதன் ஒரு சிக்னல்தான் நேற்று நடந்த கீப்பிங் மாற்றம். அவர் உள்ளே சென்றதும், பண்ட் கீப்பிங் செய்ததும் இதனால்தான் என்று கூறுகிறார்கள். தோனி விரைவில் ஓய்வை அறிவிக்கலாம், அதனால் தான் இல்லாமல் விளையாட அவர் அணியை தயார்படுத்துகிறார் என்றும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications