ஆஆஆ.. தோனி அடித்த ஷாக்கிங் சிக்ஸ்.. மிரண்டு போய் பார்த்த கோலி.. வைரலாகும் வீடியோ!
Recommended Video
லண்டன்: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணியின் மூத்த வீரர் தோனி அடித்த சிக்ஸ் ஒன்று பெரிய வைரலாகி உள்ளது. முக்கியமாக அதற்கு கோலி கொடுத்த ரியாக்சனும் பெரிய ஹிட் அடித்துள்ளது.
இன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்கை இந்திய அணி துவம்சம் செய்து இருக்கிறது என்றே கூற வேண்டும்.
களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் எல்லோரும் அதிரடியாக ஆடி இந்திய அணியின் ஸ்கோரை இழந்தனர். கே எல் ராகுல் கூட 3 பந்தில் 11 ரன்கள் எடுத்தார்.

எப்படி அடித்தார்
இந்த நிலையில் 5 வது பேட்ஸ்மேனாக களமிறங்கி ஆடினார் தோனி. பாண்டியாவின் அதிரடியை தொடர்ந்து இவரும் அதிரடியாக ஆடினார். இரண்டாவது பாலில் இருந்து தனது அதிரடியை காட்டினார் தோனி. மொத்தம் 15 நிமிடம்தான் தோனி களத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை ரன்
மொத்தம் 14 பந்துகளை தோனி எதிர்கொண்டார். இதில் 27 ரன்கள் அடித்தார். இதில் மூன்று பவுண்டரி அடித்தார். அதே போல் ஒரு சிக்ஸர் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிக்ஸ் அடித்தார்
எல்லா பேட்ஸ்மேன்களும் ஸ்டார்க் பந்தில் அடிக்க பயப்பட்டனர். ஆனால் பாண்டியா, தோனி அப்படியில்லை. அவர்கள் இருவரும் ஸ்டார்க் பந்தில்தான் அதிரடியாக ஆடினார்கள். ஸ்டார்க் போட்ட 49 வது ஓவரில் தோனி சிக்ஸ் அடித்தார்.
பவுண்டரி அடித்தார்
அதற்கு அடுத்த பாலே தோனி பவுண்டரி அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின் சிங்கிள், 2 ரன்கள் என்று அந்த ஓவர் முழுக்க அதிரடியாக ஆடினார். இவர் அடித்த சிக்ஸ்தான் தற்போது வைரலாகி உள்ளது.
கோலி ரியாக்சன்
இதற்கு கோலி கொடுத்த ரியாக்சனும் பெரிய வைரலானது. இந்த ஓவரில் கோலிக்கு நிறைய பந்துகள் கிடைத்து இருந்தால் அவர் செஞ்சுரி அடித்து இருக்க முடியும். ஆனால் அந்த வருத்தத்தை அவர் முகத்தில் காட்டவே இல்லை.
வாவ்
ஆனால் தோனி ஒரு சிக்ஸ் அடித்ததும், வாயை பிளந்து வாவ் என்றபடி அதை பார்த்துக் கொண்டே நின்றார். காதலை காதலியை பார்ப்பது போல, அம்மா குழந்தையை முதல் தடவை பார்ப்பது போல அந்த சிக்சை ஆ என்று பார்த்துக் கொண்டு இருந்தார். கோலியின் இந்த அசத்தல் ரியாக்சன் வீடியோவாக வெளியாகி பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications