சொதப்பல் மேல் சொதப்பல்.. மீண்டும் மோசமாக ஆடிய தோனி.. கோலி அதிர்ச்சி.. ரசிகர்கள் கோபம்!
லண்டன்: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் தோனி மிகவும் மெதுவாக ஆடியது பெரிய விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது. கடைசி ஓவரில் மட்டும் அதிரடியாக ஆடுவதற்கு அவர் எதற்கு என்று கேள்விகள் எழுந்துள்ளது.
மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இந்தியாவிற்கு எதிரான போட்டி தற்போது இங்கிலாந்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி நடக்கும் ஓல்ட் டிரபோர்ட் கிரிக்கெட் மைதானம் பேட்டிங் பிட்ச்.
ஆனாலும் கூட இந்த பிட்சில் இந்தியா மிக மோசமாக விளையாடி உள்ளது. முக்கிய இந்திய வீரர் தோனி மிகவும் பொறுமையாக ஆடினார்.

மோசம்
மொத்தம் 61 பந்துகள் பிடித்த தோனி 56 ரன்கள் எடுத்தார். அதுவும் கடைசி நேரத்தில் அடித்த ரன்கள் ஆகும். இதற்கு எதிராக பல கிரிக்கெட் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். தோனி நிறைய பந்துகளை குடித்துவிட்டார் என்று நிறைய பேர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். தோனி இன்னும் கொஞ்சம் பொறுப்பாக ஆடி இருக்கலாம் என்று கூட கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

போன போட்டி
போன போட்டியிலும் தோனி இப்படித்தான் ஆடினார். இந்த போட்டியிலும் அவர் ஸ்பின் பவுலிங்கில் மோசமாக திணறுகிறார். முக்கிய நேரத்தில் இந்தியாவின் ரன் ரேட் குறைவதற்கு அவர்தான் காரணம். கடைசி ஓவரில் அடிப்பதற்கு அவர் ஏன் வேண்டும். அதற்கு அவர் கடைசி நேரத்தில் களமிறங்கி இருக்கலாமே என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

டெஸ்ட் போட்டி
ஒருநாள் போட்டியில் ஆடுவதற்கு பதிலாக டெஸ்ட் போட்டியில் ஆடுவது போல ஆடிக்கொண்டு இருந்தார். தேவையான பந்துகளை மட்டுமே அவர் தொட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஆடுவதற்கு அவர் ஓய்வு எடுத்துவிட்டு நலன் பெயருடன் வீட்டிற்கு செல்லலாம் என்று பலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

ஓய்வு குறித்து
இதனால் தோனி ஓய்வு பெற வேண்டும் என்று வரிசையாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் தோனி சென்ற போட்டியை விட இந்த போட்டியில் கொஞ்சம் நன்றாக ஆடினார் என்றே கூற வேண்டும். இந்த போட்டியில் 61 பந்துகள் பிடித்த அவர் 2 சிக்ஸர் உட்பட 56 ரன்கள் எடுத்தார்.


Click it and Unblock the Notifications