For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போச்சு.. ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் இது 2வது முறை... தோனிக்கா இப்படி ஆனது?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி அவுட்டான விதம் பெரிய வைரலாகி உள்ளது.

லண்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் தோனி அவுட்டான விதம் பெரிய வைரலாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போட்டியில் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி மோசமாக சொதப்பி வருகிறது. இந்த போட்டியில் இந்தியா முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்தது.

மொத்தமாக 50 ஓவர் பிடித்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 224 ரன்கள்தான் எடுத்தது. இந்த உலகக் கோப்பையில் முதலில் பேட்டிங் இறங்கி இந்தியா அடித்த மிக குறைவான ஸ்கோர் இதுதான்.

மிக மோசம்

மிக மோசம்

இந்த போட்டியில் தோனி தொடக்கத்தில் இருந்தே நிதானமாக ஆடி வந்தார். சரியாக சொல்ல வேண்டும் என்றால் அவர் ஒருநாள் போட்டியில் ஆடுவதற்கு பதிலாக டெஸ்ட் போட்டியில் ஆடுவது போல ஆடிக்கொண்டு இருந்தார். தேவையான பந்துகளை மட்டுமே அவர் தொட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் விமர்சனம்

ஏன் விமர்சனம்

இதற்கு எதிராக பல கிரிக்கெட் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். தோனி நிறைய பந்துகளை குடித்துவிட்டார் என்று நிறைய பேர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். தோனி இன்னும் கொஞ்சம் பொறுப்பாக ஆடி இருக்கலாம் என்று கூட கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

எப்படி அவுட்டானார்

எப்படி அவுட்டானார்

தோனி 52 பந்தில் 28 ரன்கள் அடித்து இருந்த போது அவுட்டானார். இவர் ரஷீத் கான் பந்தில் அவுட்டானார். கீப்பர் இஷ்ரத் அலி கில்தோனியை ஸ்டம்பிட் செய்தார். இதனால் நிதானமாக ஆடி வந்த தோனி அவுட்டாகி பெவிலியன் சென்றார்.ஸ்டம்பிட் செய்வதில் வல்லவரான தோனியே இப்படி அவுட்டாகி இருக்கிறார்.

அட இப்படியா

அட இப்படியா

இதற்கு முன் தோனி ஒரே ஒருமுறைதான் இப்படி ஸ்டம்பிட் ஆகி இருக்கிறார். 2011 உலகக் கோப்பை போட்டியில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இப்படி அவர் அவுட்டானார். மொத்தம் 293 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள தோனி இரண்டு முறை மட்டுமே இப்படி அவுட்டாகி உள்ளார் என்பது ஆச்சர்யமான விஷயம்.

Story first published: Saturday, June 22, 2019, 19:15 [IST]
Other articles published on Jun 22, 2019
English summary
ICC World Cup 2019: Dhoni stumped wicket becomes viral - Here is the reason.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+