Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்கு இவர்தான் ஒரே சவால்.. கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.. மாஸ் போட்டி

Recommended Video

இந்த உலக கோப்பையில் தோனியுடன் சவால் விட போகும் வீரர் இவர்தான்

லண்டன்: தற்போது நடந்து கொண்டிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனிக்கு மிக முக்கியமான வீரர் ஒருவர் பெரிய போட்டியாக இருப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி நடந்து வருகிறது. இப்போதுதான் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கியது போல இருக்கிறது. ஆனால் இதுவரை நான்கு போட்டிகள் நடந்து முடிந்து இருக்கிறது.

ஆனால் நான்கு போட்டியில் ஒன்றில் மட்டுமே பெரிய ஸ்கோர் அடிக்கப்பட்டுள்ளது. மற்ற போட்டிகள் அனைத்திலும் 250 ரன்களுக்கு குறைவான ஸ்கோரே அடிக்கப்பட்டுள்ளது. இரண்டு போட்டியில் 150க்கும் குறைவான ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

இதனால் இந்த கிரிக்கெட் தொடர் அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. சில பேட்ஸ்மேன்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதை பொறுத்தே அணியின் வெற்றி நிர்ணயிக்கப்படும். இந்த உலகக் கோப்பை போட்டியில் இரண்டு முக்கியமான வீரர்கள் அதிக எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

தோனி பார்ம்

தோனி பார்ம்

தோனி தனது வாழ்நாள் பார்மில் இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். இதற்கு முன் இவ்வளவு பார்மில், இத்தனை திட்டங்களுடன் அவர் விளையாடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக தனது தனிப்பட்ட ஆட்டத்தில் இவர் அதிகம் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். இது இந்திய அணிக்கு மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் போட்டியில் இருந்தே தோனி நல்ல பார்மில் இருந்தார் என்றுதான் கூற வேண்டும். சென்னை அணியை இறுதிப் போட்டி வரை தனி நபராக கொண்டு சென்றது தோனிதான். கிட்டத்தட்ட 90% போட்டியில் அவரின் ஆட்டம்தான் சென்னைக்கு அணிக்கு உதவியது. அதே பார்ம் தற்போது இங்கிலாந்திலும் அவருக்கு நீடித்து வருகிறது என்றுதான் கூற வேண்டும்.

மிக முக்கியம்

மிக முக்கியம்

வங்கதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 77 பந்துகளில் செஞ்சுரி கடந்து அதிரடி காட்டினார் தோனி. இங்கிலாந்து பிட்சில் தோனி நன்றாக ஆடுவார் என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். இந்திய அணியின் கேம் செஞ்சாராக் தோனி இருப்பார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

யார்

யார்

அதே சமயம் தோனி போலவே இன்னொரு வீரர் இருக்கிறார். ஆனால் அவர் ஆல் ரவுண்டர். கண்டிப்பாக தோனியை போலவே தன்னுடைய அணிக்கு மிகப்பெரிய துருப்புச்சீட்டாக இவர் இருப்பார் என்றும் கூறுகிறார். அவர் வேறு யாரும் இல்லை.. மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டர் ரசல். ஆம் தோனிக்கு இணையாக இவர் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு உதவுவார் என்று கூறுகிறார்கள்.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

ஐபிஎல் போட்டியில் மிக முக்கியமான வீரராக ரசல் இருந்தார். ரசல் விளையாடியதுதான் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு மிக மிக முக்கியமான காரணமாக இருந்தது. தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டத்திலும் அதே நிலைதான் நீடித்து வருகிறது. தன்னுடைய பார்மை அவர் தற்போது தக்க வைத்து இருக்கிறார்.

இவர்களுக்கு இடையில் போட்டி

இவர்களுக்கு இடையில் போட்டி

இந்தியா, மேற்கு இந்திய தீவுகள் ஆகிய இரண்டு அணியிலும் இந்த இரண்டு வீரர்களும் மிக முக்கியமான வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள். போட்டியின் கடைசி நேரத்தில் கூட இவர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, June 2, 2019, 11:35 [IST]
Other articles published on Jun 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+