Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கனமழையிலும் தோனிக்காக காத்திருந்த ரசிகர்கள்.. வெளியே வந்த தல.. என்ன ரியாக்சன் கொடுத்தார் பாருங்க!

லண்டன்: நேற்று நியூசிலாந்து இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தோனி செய்த காரியம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

இங்கிலாந்தில் பெய்து வரும் மழை காரணமாக வரிசையாக உலகக் கோப்பை கிரிகெட் போட்டிகள் ரத்தாகி வருகிறது.மழை காரணமாக இலங்கை வங்கதேசம், இலங்கை பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.

மழை காரணமாக நேற்று நியூசிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான போட்டிகள் ரத்து செய்யப்பட்டது . இதனால் மொத்தம் 4 போட்டிகள் இந்த தொடரில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இருந்தனர்

இருந்தனர்

இந்த மழை பெய்த போது இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் எல்லோரும் பெவிலியனில்தான் இருந்தனர். எல்லோரும் மழை எப்போது விடும் என்று பெவிலியனில் காத்து இருந்தனர். இவர்கள் செய்வது எல்லாம் மைதானத்தில் இருந்து பெரிய திரையில் காட்டப்பட்டது. இந்த புகைப்படங்கள் பெரிய வைரலானது.

வெளியே வரவில்லை

வெளியே வரவில்லை

ஆனால் இத்தனை சம்பவங்கள் நடப்பதற்கு மத்தியிலும் தோனி எங்கே சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. நேற்று காலை தோனி மைதானத்தில் பயிற்சி செய்த போது மட்டுமே மைதானத்திற்கு வெளியே வந்தார். ஆனால் மழை பெய்த நேரத்தில் அவரை பெவிலியனில் பார்க்க முடியவில்லை. இதனால் பலரும் தோனி எங்கே என்று தேடினார்கள்.

ரசிகர்கள் கத்தினார்கள்

ரசிகர்கள் கத்தினார்கள்

இதனால் மழைக்கு இடையிலும் பெவிலியனுக்கு வெளியே நின்று ரசிகர்கள் தோனி தோனி என்று கத்தினார்கள். தோனியை பார்க்க வேண்டும் என்று இவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டார்கள். மழையில் தொடர்ந்து நனைந்தபடி அவர்கள் வெளியிலேயே நின்றார்கள். மழை அதிகமானாலும் அவர்கள் கலைந்து செல்லவில்லை.

உள்ளே வந்தார்

இந்த விஷயம் அறிந்ததும் தோனி வெளியே வந்தார். வெளியே வந்த அவர் ரசிகர்களை நோக்கி கை காட்டினார். தனது கட்டை விரலை உயர்த்தி அவர்களிடம் காட்டினார். அவரை பார்த்ததும் ரசிகர்கள் ஓ என்று கூச்சலிட்டார்கள். இந்த நிகழ்வு அப்படியே வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, June 14, 2019, 14:26 [IST]
Other articles published on Jun 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+