Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி ஆட மாட்டார்.. உலகக் கோப்பைக்கு பின் புதிய அதிர்ச்சி.. அடுத்த தொடரில் கிடையாது.. ஏன் தெரியுமா?

Recommended Video

WORLD CUP 2019 | உலகக் கோப்பைக்கு பின் அதிர்ச்சி! அடுத்த தொடரில் தோனி கிடையாது- வீடியோ

லண்டன்: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர் தோனி விளையாட மாட்டார் என்று செய்திகள் வருகிறது.

இந்தியாவின் உலகக் கோப்பை பயணம் முடிவிற்கு வந்துள்ளது. இனி அடுத்து இதுபோல ரோலர் கோஸ்டர் ரைடர் போட்டிகளை பார்க்க நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான செமி பைனல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை அடுத்து இந்தியா உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது.

என்ன விமர்சனம்

என்ன விமர்சனம்

இந்த நிலையில் இந்த உலகக் கோப்பை தொடர் முழுக்க இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி மிக மோசமாக திணறினார். சரியாக விளையாட முடியாமல் அவர் கஷ்டப்பட்டார். அவர் ஆட்டத்தில் முன்பு இருந்த வேகம் இல்லை என்று விமர்சனம் வைக்கப்பட்டது.

ஓய்வு பெற போகிறார்

ஓய்வு பெற போகிறார்

அதேபோல் உலகக் கோப்பை தொடரோடு அவர் ஓய்வு பெற போகிறார் என்றும் செய்திகள் வந்தது. அவரின் கடைசி உலகக் கோப்பை போட்டிதான் அவரின் கடைசி ஒருநாள் போட்டி என்று செய்திகள் வந்தது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவுமே வெளியாகவில்லை.

இல்லை

இல்லை

இந்த நிலையில் இந்தியா மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையில் வரும் ஆகஸ்ட் மூன்றாம் தேதி கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. மேற்கு இந்திய தீவுகளில் இந்த தொடர் நடக்கிறது. 3 ஒருநாள், 3 டி 20, 2 டெஸ்ட் போட்டிகள் இந்த தொடரில் நடக்க உள்ளது.

விளையாட மாட்டார்

விளையாட மாட்டார்

இந்த தொடரில் தோனி விளையாட மாட்டார் என்று கூறுகிறார்கள். இதற்காக உத்தேச அணி பட்டியலை பிசிசிஐ தயார் செய்து இருக்கிறது. அதில் தோனியின் பெயர் இல்லை. ஆனால் இது இறுதி பட்டியல் கிடையாது.

யாரும் கிடையாது

யாரும் கிடையாது

இந்த தொடரில் இந்திய வீரர்கள் கோலி, பும்ரா ஆகியோர் விளையாட மாட்டார்கள். ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி இந்த போட்டியில் விளையாட போகிறது. அதேபோல் தோனியும் இந்த போட்டியில் இந்திய அணிக்காக விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம் என்ன

காரணம் என்ன

இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. தோனிக்கு தொடர் முதுகு வலி பிரச்சனை இருப்பதால் அவருக்கு ஓய்வு தேவை. இன்னொரு காரணம், தோனி மேற்கு இந்திய தீவுகள் தொடரில் ஓய்வு பெற போகிறார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க இப்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Friday, July 12, 2019, 11:52 [IST]
Other articles published on Jul 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+