Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொடுத்து விடாதீர்கள் தோனி.. நடப்பது நடக்கட்டும்.. ஐசிசிக்கு எதிராக ரசிகர்கள் கோபம்.. பின்னணி என்ன?

Recommended Video

#DhoniKeepTheGloves | ஐசிசிக்கு எதிராக ரசிகர்கள் கோபம்! பின்னணி என்ன?- வீடியோ

லண்டன்: இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு ஆதரவாகவும், ஐசிசிக்கு எதிராகவும் இந்திய ரசிகர்கள் களமிறங்கி டிவிட் செய்து வருகிறார்கள். இந்த பிரச்சனைக்கு பின் முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி கிரிக்கெட் வீரருமான தோனி, தன்னுடைய பிராண்டுகளுக்கு மிகவும் பெயர் பெற்றவர். அவரின் செவன் என்ற பிராண்டைதான் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

அதேபோல் அவரின் ஸ்பார்ட்டன்ஸ் பேட்டும் உலகம் முழுக்க வைரல். அப்படித்தான் அவர் அணிந்து இருக்கும் மிலிட்டரி கிளவுசும் மிகவும் புகழ்பெற்றது.

என்ன கிளவுஸ்

என்ன கிளவுஸ்

தோனி தற்போது மிலிட்டரி உடை மாடலில் ஒரு கிளவுஸ் அணிந்து வருகிறார். இதன் வெளிப்பக்கம் பச்சை நிறத்தில் இருக்கும். இதன் உள்பக்கம் மிலிட்டரி ஆடை போல டிசைன் செய்யப்பட்டு இருக்கும். இவரின் இந்த கிளவுஸ் மிகவும் புகழ்பெற்றது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தற்போது இந்திய ராணுவத்தின் பாராசூட் படையில் லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். இவர் பலமுறை இந்திய ராணுவ படையுடன் சேர்ந்து பயிற்சியும் செய்துள்ளார். இதன் காரணமாக இவருக்கு ''பாலிடான் பேட்ச்'' அளிக்கப்பட்டது. இந்த பேட்சை பெறுவதற்கு சிறப்பு பயிற்சிகளை எடுக்க வேண்டும்.

அணிந்து இருந்தார்

அணிந்து இருந்தார்

இந்த நிலையில் இந்த பேட்சை அணிந்துதான் தோனி, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் உலகக் கோப்பை போட்டியை விளையாடினார். ஆம், அவரின் கிளவுஸில் இந்த பேட்ச் இடம்பெற்று இருந்தது. இதை பலரும் கவனித்து, வாவ் தோனியின் கிளவுஸ் மாறி இருக்கிறதே என்று டிவிட் செய்து வந்தனர்.

நீக்க சொன்னார்கள்

நீக்க சொன்னார்கள்

ஆனால் தோனி இப்படி பேட்ச் உள்ள கிளவுஸை அணிய கூடாது என்று ஐசிசி தடை போட்டது. ஒரு குறிப்பிட்ட ராணுவம், மதம், பிரிவினை, இதை குறிக்கும் வகையில் ஆடை அணிய கூடாது என்ற விதியை குறிப்பிட்டு தோனியின் கிளவுஸிற்கு தடை விதித்தது. தோனி இதற்கு அனுமதி வாங்கவில்லை என்று கூறி தடை விதிக்கப்பட்டது. பிசிசிஐ அந்த கிளவுஸை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் ஐசிசி கூறியது.

ஏன் இப்போது

ஏன் இப்போது

இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தற்போது இதற்கு எதிராக ரசிகர்கள் எல்லோரும் கொந்தளித்து இருக்கிறார்கள். தோனி அந்த கிளவுஸை திருப்பி கொடுக்க கூடாது என்று டிவிட் செய்து வருகிறார்கள். இதற்காக தோனி அந்த கிளவுஸை வைத்துக்கொள்ளுங்கள் #DhoniKeepTheGlove என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஏன் வைரல்

ஏன் வைரல்

இதில் ஐசிசிக்கு எதிராக பிசிசிஐ குரல் கொடுக்க வேண்டும். இது தோனியின் உழைப்பிற்கு, திறமைக்கு கிடைத்த மரியாதை என்று ரசிகர்கள் டிவிட் செய்து வருகிறார்கள். நடப்பது நடக்கட்டும் நீங்கள் அதை அணிந்து விளையாடுங்கள் என்று டிவிட் செய்து வருகிறார்கள். இதனால் #DhoniKeepTheGlove டேக் தேசிய அளவில் வைரலாகி உள்ளது.

Story first published: Friday, June 7, 2019, 12:13 [IST]
Other articles published on Jun 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+