Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் சர்ச்சையாகும் உப்புத்தாள்.. இந்தியாவிற்கு எதிராக ஆஸி வீரர் பந்தை சேதம் செய்தாரா?.. உண்மை!

Recommended Video

World Cup 2019-ஆஸி. மீண்டும் பால் டெம்பரிங்கில் ஈடுபட்டதா ? பதறிய ரசிகர்கள்

லண்டன்: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா வீரர் ஆடம் சாம்பா பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. நேற்றே இந்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நேற்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. உலகக் கோப்பையில் இதுவரை நடந்த லீக் ஆட்டங்களில் இதுதான் மிகவும் வைரலான லீக் ஆட்டம் ஆகும்.

போட்டியில் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில்தான் நேற்று சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று நடைபெற்றது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

நேற்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய இந்திய அணி, 5 விக்கெட்டிற்கு 352 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 57, தவான் 117, கோலி 82, பாண்டியா 48, தோனி 27, கே எல் ராகுல் 11 ரன்கள் எடுத்தனர். அதன்பின் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் 69, வார்னர் 56, கேரி 55 ரன்கள் எடுத்தனர்.

தோல்வி அடைந்தது

தோல்வி அடைந்தது

50 ஓவர் முடியும் போது அந்த அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 318 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் ஆடம் சாம்பா பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நிறைய வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

என்ன புகார்

என்ன புகார்

அதன்படி ஆடம் சாம்பா பந்து போடுவதற்கு முன் தனது கையை பாக்கெட்டுக்குள் விடுகிறார். பின் அங்கிருந்து ஏதோ ஒரு பொருளை வெளியே எடுக்கிறார். பின் பந்தை தனது கையால் துடைத்துவிட்டு, பின் மீண்டும் கையை பாக்கெட்டுக்குள் விடுகிறார். இதுதான் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏன் இப்படி

ஏற்கனவே சென்ற வருடம் ஸ்மித் மற்றும் வார்னர் ஆஸ்திரேலிய அணியில் பந்தை உப்புத்தாள் வைத்து சேதப்படுத்தினர். இதற்காக தண்டனை பெற்ற அவர்கள் ஒருவருடம் தடை பெற்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஆடம் சாம்பா சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

ஆனால் என்ன

ஆனால் இவர் கையை வைத்து தேய்த்தது உப்புத்தாள் கிடையாது. அது வெறும் துணி. கையின் ஈர பதத்தை போக்குவதற்காக ஆடம் சாம்பா இதை எப்போதும் பயன்படுத்துவார். இதை தேவையில்லாமல் பெரிதாக்கி பிரச்சனை செய்ய முயல்வது தவறான விஷயம். இதை விசாரித்தால் கூட உண்மை தெரிந்துவிடும் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்து இருக்கிறார்.

Story first published: Monday, June 10, 2019, 18:27 [IST]
Other articles published on Jun 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+