விரலில் ஏற்பட்ட காயம்.. ரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய தோனி.. வைரலாகும் அந்த ஒரு புகைப்படம்!
Recommended Video
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் விரலில் ரத்த காயம் ஏற்பட்ட பின்பும் கூட தோனி தொடர்ந்து விளையாடியது பெரிய வைரலாகி உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது. இந்தியாவிற்கு எதிராக மொத்தம் 50 ஓவரில் இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்தது.
அதன்பின் இந்தியா ஐம்பது ஓவரில் 306 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு தோனியும் ஒரு காரணம் என்று கூறப்பட்டார்.

விரலில் காயம்
இந்த போட்டியில் தோனியின் விரலில் பேட்டிங் செய்யும் போது காயம் ஏற்பட்டது. பவுன்சர் பந்து கையில் பட்டதில் தோனி விரலில் காயம் ஏற்பட்டது. இதை தோனி முதலில் கவனிக்கவில்லை. அதன்பின் அந்த காயம் காரணமாக அவரின் விரலில் ரத்தம் வந்துள்ளது. ரத்தம் கிளவுஸில் வெளிப்படையாக தெரிந்தது. அதன்பின்பே ரத்தம் வருவதை தோனி கவனித்தார்.

என்ன செய்தார்
இதையடுத்து தோனி ரத்த காயம் இருந்த விரலை அப்படியே வாயில் வைத்து சப்பினார். ரத்தம் வடிவது நிற்க வேண்டும் என்று அவர் இப்படி செய்தார். இதையடுத்து அவர் வாய் முழுக்க ரத்தமாகி இருக்கிறது. இதனால் அவர் வாயில் இருந்த ரத்தத்தை அப்படியே மைதானத்தில் துப்பினார். பின் அவர் அதே காயத்துடன் விளையாடினார்.
இதுதான் வைரல்
இந்த சம்பவம்தான் தற்போது வைரலாகி இருக்கிறது. தோனி வாயில் இருந்து ரத்தத்தை துப்புவதை பார்த்து பலர் வருத்தப்பட்டு இருக்கிறார்கள். விரலில் காயத்துடன்தான் தோனி ஆடினாரா என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த புகைப்படங்களை பலர் இணையத்தில் ஷேர் செய்து இருக்கிறார்கள்.
முக்கியம்
இந்த போட்டியில் தோனி சரியாக ஆடவில்லை என்று விமர்சனம் இருக்கிறது. அவர் பொறுப்பாக ஆடவில்லை என்று சிலர் விமர்சனம் வைத்து இருந்தனர். அந்த விமர்சனத்திற்கு எல்லாம் இந்த புகைப்படத்தை பதிலாக அளித்து இருக்கிறார்கள். கையில் ரத்த காயத்துடன் ஆடுகிறார் இவருக்கா பொறுப்பு இல்லை என்று அவரின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications