Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புறக்கணிப்பு தொடர்கிறது.. அவரை இன்றும் கூட நம்பவில்லை.. கோலி செய்த தவறால் சொதப்பிய இந்தியா!

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் மோசமான பவுலிங்கிற்கு கோலி செய்த முக்கியமான தவறு ஒன்றுதான் காரணம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்தியா இங்கிலாந்து இடையே உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் பவுலிங்கை இங்கிலாந்து வீரர்கள் துவைத்து தொங்க போட்டு இருக்கிறார்கள் .

இந்த தொடரில் இந்திய அணி இவ்வளவு மோசமாக பவுலிங் செய்யவில்லை. முகமது ஷமி, பும்ரா தவிர யாருமே சரியாக இன்று பந்து வீசவில்லை.

என்ன செய்தார்

என்ன செய்தார்

பொதுவாக இந்திய அணி முதல் பத்து ஓவர்களை இரண்டு பவுலர்களை வைத்தே சமாளிக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் இருவர்தான் இந்திய அணியில் முதல் பத்து ஓவர்களை வீசுவார்கள். இந்த பவர் பிளேயில் பெரும்பாலும் 50 ரன்களுக்கு குறைவாகவே இந்திய அணி கொடுக்கும். ஆனால் இன்று அப்படி நடக்கவில்லை.

எப்படி ஆனது

எப்படி ஆனது

இன்று முதல் ஓவர் வீசிய ஷமி, அந்த ஓவரிலேயே பவுண்டரி கொடுத்தார். அதன்பின் மூன்றாவது ஓவரில் பிரைஸ்டோ அவரது பந்துகளை அடித்து நொறுக்கினார். ஆனால் பும்ரா போட்ட ஓவர்களில் பெரிதாக ரன் செல்லவில்லை. இதையடுத்து கோலி ஷமி ஓவரில் ரன் செல்கிறது என்று உடனே பவுலிங்கை மாற்றினார். உடனே ஸ்பின் பவுலர் குல்தீப் யாதவை கொண்டு வந்தார்.

இங்குதான் தவறு

இங்குதான் தவறு

இதுதான் தவறானது. இந்திய அணியில் ஷமி மீது பெரிதாக வீரர்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற புகார் இருக்கிறது. இரண்டு போட்டிகளில் அவர் 8 விக்கெட் எடுத்தாலும் அவரை பெரிதாக அணி நிர்வாகம் அவரை நம்புவதில்லை. இப்போதும் புவனேஷ்வர் குமாருக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் ஷமிக்கு அதன்பின் வரிசையாக 10 ஓவர்கள் கொடுக்கப்படவில்லை.

10 ஓவர் மோசம்

10 ஓவர் மோசம்

வரிசையாக 10 ஓவர்களை சாஹல், குல்தீப், பாண்டியா வீசினார்கள். இவர்கள் மூவரும் மானவாரியாக ரன்களை வாரி வழங்கினார்கள் என்றுதான் கூற வேண்டும். பாண்டியா ஒரு ஓவருக்கு 6, சாஹல் 8, குல்தீப் 7 ரன்கள் கொடுத்தனர். பவுண்டரி, சிக்ஸர் என்று வாரி வழங்கினார்கள். இவர்கள் மூவரும் போட்ட 10 ஓவரில் 98 ரன்கள் போனது.

இல்லை

இல்லை

அதன்பின் 30 ஓவர்கள் தாண்டிய பின்தான் ஷமி மீண்டும் ஓவர் போட்டார். கை மேல் பலன் கிடைத்தது. அந்த ஓவரில் அவர் பிரைஸ்டோ விக்கெட்டை எடுத்தார். அதற்கு அடுத்து அவர் போட்ட 34வது ஓவரில் மீண்டும் மோர்கன் விக்கெட்டை எடுத்தார். பின் 45வது ஓவரில் ஜோஸ் பட்லர் விக்கெட்டை எடுத்தார். அவருக்கு 25 ஓவருக்கு முன்பாகவே கொஞ்சம் பந்து வீச வாய்ப்பு கிடைத்து இருந்தால் அப்போதே விக்கெட் எடுத்திருப்பார்.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

அப்போதே இவ்வளவு ரன் சென்று இருக்காது. ஆனால் அதிக ரன்கள் கொடுத்த சாஹல், குல்தீப், பாண்டியா ஆகியோருக்கு கோலி மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்தார். கோலி எப்போதும் இப்படித்தான் செய்கிறார், அவர் ஷமியை நம்புவதே இல்லை என்று புகார் வைக்கப்பட்டு வருகிறது. அது இந்த போட்டியிலும் நடந்தேறி உள்ளது.

Story first published: Sunday, June 30, 2019, 18:39 [IST]
Other articles published on Jun 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+