Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் வீக்னஸ், சிஎஸ்கே ரகசியங்களை ஆஸி. அணியிடம் பகிர்ந்தாரா கோச் மைக் ஹசி.. பரபர பதில்!

Recommended Video

ICC World Cup 2019: சிஎஸ்கே ரகசியங்களை ஆஸியிடம் பகிர்ந்தாரா மைக் ஹசி?- வீடியோ

லண்டன்: சிஎஸ்கேவின் ரகசியம் குறித்தும், தோனியின் வீக்னஸ் குறித்தும் சிஎஸ்கே பேட்டிங் கோச் மைக் ஹசி ஆஸ்திரேலிய வீரர்களிடம் பகிர்ந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு தற்போது மைக் ஹசி பரபரப்பான பதில் அளித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. எல்லா அணிகளும் குறைந்தது ஒரு போட்டியிலாவது ஆடிவிட்டது.

ஆஸ்திரேலியா அணி மொத்தம் இரண்டு போட்டியில் விளையாடி இரண்டிலும் வென்றுவிட்டது. இந்திய அணி ஒரு போட்டியில் விளையாடி அதில் வென்றுள்ளது.

யார் கோச்

யார் கோச்

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் கோச் மைக் ஹசி பேட்டி அளித்து இருக்கிறார். இவர் தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு சிறப்பு பேட்டிங் ஆலோசகராக இருக்கிறார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்திய வீரர்களின் ரகசியங்களை அவர் ஆஸ்திரேலியா வீரர்களுடன் பகிர்ந்து கொண்டாரா என்று நிறைய கேள்விகள் எழுந்துள்ளது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இதுகுறித்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் கோச் ஹசியே கருத்து தெரிவித்துள்ளார். அதில், சென்னை அணி உலகில் மிக வலுவான அணிகளில் ஒன்று. சென்னை அணியில் பெரிய அளவில் வலிமையற்ற விஷயங்கள் என்று எதுவும் கிடையாது. அதேபோல் தோனிக்கும் வீக்னஸ் என்று எதுவும் இல்லை. ஆம் அவருக்கு பெரிதாக வீக்னஸ் எதுவும் இல்லை.

தோனி எப்படி

தோனி எப்படி

அதனால் தோனியின் வீக்னஸ் என்று ஆஸ்திரேலிய அணியிடம் சொல்லிக்கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை. அப்படியே தோனிக்கு ஏதாவது வீக்னஸ் இருந்தாலும். அது ஆஸ்திரேலியா அணிக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். அதை நான் சொல்லித்தான் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது. ஆஸ்திரேலியா அணி இதை திட்டமிட்டுக்கொள்ளும்.

சிஎஸ்கே ஏன்?

சிஎஸ்கே ஏன்?

சிஎஸ்கேவின் வெற்றி ரகசியத்தை நாங்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. சிஎஸ்கே வித்தியாசமான டீம். அதன் ரகசியத்தை நாங்கள் எப்போதும் பாதுகாப்போம். ஆனால் ஐபிஎல் போட்டி இந்திய வீரர்களுக்கு மட்டுமில்லாமல், மற்ற நாட்டு வீரர்களுக்கும் பெரிய உதவியாக இருந்தது. ஒவ்வொரு நாட்டு வீரர்களும் நிறைய கற்றுக்கொள்கிறார்கள்.

எப்படி இருக்கிறார்

எப்படி இருக்கிறார்

அதேபோல் தோனி வித்தியாசமான திறமை கொண்டவர். மிக மோசமான சூழ்நிலையில் கூட அவர் கூலாக இருப்பார். யாராலும் அப்படி இருக்க முடியாது. அவர் தனக்குள் ஒரு திட்டம் வைத்திருப்பார். அந்த திட்டத்தை அவர் மாற்றவே மாட்டார். மிக கட்சிதமாக அதை முடித்துக்காட்டுவார். எல்லா வீரர்களையும் எதிர்கொள்வது போல ஆஸ்திரேலியா தோனிக்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கும் என்று நம்புகிறேன் என்று ஹசி கூறியுள்ளார்.

Story first published: Friday, June 7, 2019, 17:10 [IST]
Other articles published on Jun 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+