Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இத்தனை வருடமாக காத்திருக்கிறார்.. இதுதான் சரியான நேரம்.. இந்திய அணிக்கு வரும் ஸ்பெஷலிஸ்ட்!

லண்டன்: இந்திய அணியில் அடுத்த போட்டியில் 4வது அல்லது 5 வது இடத்தில் இறங்க போகும் வீரர் யார் என்ற கேள்வி தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது . இந்திய அணி வீரர்கள் இன்று நடத்திய பயிற்சியில் அதற்கான பதில் கிடைத்தது.

இந்திய அணியில் ஒரு பிரச்சனை முடிவிற்கு வந்தால் இன்னொரு பிரச்சனை எழுகிறது. நீண்ட வருடமாக தொடர்ந்து வந்த 4வது வீரர் பிரச்சனை உலகக் கோப்பைக்கு முன்புதான் சரியானது. இந்திய அணியில் 4வது வீரராக கே எல் ராகுல் களமிறங்குவார் என்று முடிவானது.

ஆனால் அதற்குள் அடுத்த பிரச்சனை வந்தது. இந்திய அணியில் நல்ல பார்மில் ஆடிக்கொண்டு இருந்த தவான் காயம் காரணமாக பாதி போட்டியில் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இப்போது என்ன

இப்போது என்ன

இதனால் இந்திய அணிக்குள் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. ஏனென்றால் கே எல் ராகுல் ஓப்பனிங் வீரராக களமிறங்க சென்றார். அதனால் அவரின் 4வது இடம் காலியானது. அதனால் அவரின் இடத்தில் யாரை களமிறங்க வைப்பது என்று விவாதம் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.

விஜய் சங்கர்

விஜய் சங்கர்

வாய்ப்பு ஒருமுறைதான் வாசல் வரை வரும். அதை பிடித்து வீட்டிற்குள் அழைத்து விருந்து வைப்பது நம்முடைய கடமை. ஆனால் அதை விஜய் சங்கர் சரியாக செய்யவில்லை. ஆம் அவருக்கு கே எல் ராகுல் இடத்தில் இறங்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிலும் சங்கருக்கு வாய்ப்பு இரண்டு வீட்டு வாசலுக்கு வந்தது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என்று இரண்டு போட்டியிலும் அவர் 4 மற்றும் 6வது இடத்தில் இறங்கி சரியாக ஆடவில்லை. பேட்டிங்கில் இரண்டு முறையும் அவர் மோசமாக சொதப்பினார்.

மாற்றம்

மாற்றம்

இந்த நிலையில் அவரின் இடத்திற்கு ஆல் ரவுண்டர் அல்லாத நல்ல பேட்டிங் ஸ்பெஷலிஸ்டை கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார் கோலி. இதற்கு இரண்டு பேருக்கு இடையில் போட்டி நிலவுவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இடையில்தான் இந்த இடத்திற்கு போட்டி நிலவி வருகிறது. ஆனால் இதில் பெரும்பாலும் தினேஷ் கார்த்திக்தான் தேர்வு செய்யப்பட இருக்கிறார் என்கிறார்கள்.

அனுபவம் எப்படி

அனுபவம் எப்படி

2004ல் இருந்து சர்வதேச போட்டிகளில் பல முறை தினேஷ் கார்த்திக் விளையாடி இருக்கிறார். முதல் தர போட்டிகளில் அவருக்கு 20 வருடம் வரை அனுபவம் இருக்கிறது. இதனால் 4வது இடத்தில் அவர் களமிறங்கினால் இந்திய அணிக்கு அசாத்திய பலமாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். தோனியும் அவரும் பார்ட்னர்ஷிப் அமைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

பயிற்சி எடுத்தார்

பயிற்சி எடுத்தார்

இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் இன்று நடத்திய பயிற்சியில் அதற்கான பதில் கிடைத்தது. ஆம் தினேஷ் கார்த்திக் இன்று 2 மணி நேரம் காலையில் இருந்து பேட்டிங் பயிற்சி செய்தார். பொதுவாக அணியில் தேர்வாகும் வீரர்களே இப்படி தீவிரமாக பயிற்சி செய்வார்கள். மாறாக விஜய் சங்கர் வலை பயிற்சியில் ஈடுப்பட்ட வீரர்களுக்கு பவுலிங் மட்டுமே செய்தார். இதனால் பெரும்பாலும் தினேஷ் கார்த்திக் வாய்ப்பு உறுதியாகிவிட்டது என்றே கூறுகிறார்கள்.

Story first published: Monday, June 24, 2019, 14:29 [IST]
Other articles published on Jun 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+