Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

15 வருட கனவு.. உழைப்பு.. இன்றுதான் மரியாதை கிடைக்கிறது.. மகுடம் சூடும் தினேஷ் கார்த்திக்!

Recommended Video

WORLD CUP 2019: IND VS BAN | DINESH KARTHICK | மகுடம் சூடும் தினேஷ் கார்த்திக்!-வீடியோ

லண்டன்: வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா இன்று விளையாடும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பாக தினேஷ் கார்த்திக் களமிறக்கப்படுகிறார். கேதார் ஜாதவிற்கு பதில் அவர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இன்று இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையில் இன்று உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடக்கிறது. இந்த தொடரில் தோல்வியையே ருசிக்காமல் இருந்த இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக தோல்வி அடைந்தது.

அந்த தோல்வியை சரி கட்டும் வகையில் இந்தியா இன்று ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா இன்று வெற்றிபெற்றால் செமி பைனலுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக் 2004ல் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அதே வருடம் உலகக் கோப்பை அணிக்கும் தேர்வானார். ஆனால் அப்போது அவர் அணியில் விளையாட முடியவில்லை. கீப்பராக அறிமுகம் ஆன இவர் தோனியின் வருகைக்கு பின் இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை.

15 வருட காத்திருப்பு

15 வருட காத்திருப்பு

இவர் 15 வருடமாக உலகக் கோப்பையில் களமிறங்க காத்து இருக்கிறார். அடுத்த உலகக் கோப்பையில் இவர் ஆட மாட்டார். 2007ல் ராகுல் டிராவிட் தலைமையில் சென்ற உலகக் கோப்பை அணியில் இவர் இடம்பெற்று இருந்தார். ஆனால் அப்போதும் அவருக்கு அணியில் களமிறங்கி விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

என்ன திறமை

என்ன திறமை

இவர் இலங்கையில் நடந்த நிதாஸ் கோப்பையில்தான் தன்னுடைய திறமையையும் நிரூபித்தார். ஆனாலும் இவர் உலகக் கோப்பை தொடரில் சென்ற போட்டி வரை களமிறக்கப்படவில்லை. திறமை இருந்து வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது இவருக்கு அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த சில போட்டிகளாக ஜாதவ் சரியாக ஆடவில்லை. இவர் தொடர்ந்து சொதப்பி வந்தார்.

வந்தார்

வந்தார்

ஜாதவின் இடத்திற்கு ஆல் ரவுண்டர் அல்லாத நல்ல பேட்டிங் ஸ்பெஷலிஸ்டை கொண்டு வர திட்டமிட்டு இருந்தார் கோலி. இதற்கு இரண்டு பேருக்கு இடையில் போட்டி நிலவுவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஜடேஜா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இடையில்தான் இந்த இடத்திற்கு போட்டி நிலவி வந்தது. ஆனால் ஜடேஜாவிற்கு பதில் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

செம

செம

இதனால் தற்போது தினேஷ் கார்த்திக்கின் 15 வருட கனவு நிறைவேறி இருக்கிறது. அவர் 2004ல் இருந்து ஆசைப்பட்ட அந்த விஷயம் இன்றைய போட்டியில் நடக்க உள்ளது. இன்று அவர் பெரும்பாலும் 7வது பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Story first published: Tuesday, July 2, 2019, 15:15 [IST]
Other articles published on Jul 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+