Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்கதானே கேப்டன்.. நீங்களே முடிவெடுங்க.. நேற்று களத்தில் நடந்த பிரச்சனை.. கோலி தோனி உரசல்?

லண்டன்: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி ஜேசன் ராயின் விக்கெட்டுக்கு ரிவ்யூ கேட்காதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டம் நடைபெற்றது. எல்லோரும் இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற போகிறது என்றுதான் கணித்து இருந்தார்கள்.

ஆனால் இந்திய அணி மோசமான பேட்டிங் காரணமாக தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்த போட்டியில் நேற்று நடந்த சம்பவம் ஒன்று பெரிய சர்ச்சையாகி இருக்கிறது .

வாய்ப்பு

வாய்ப்பு

நேற்று பாண்டியா வீசிய 11வது ஓவரில் இந்திய அணிக்கு இங்கிலாந்து வீரர் ஜேசன் ராயை வீழ்த்த நல்ல வாய்ப்பு கிடைத்தது. அந்த ஓவரின் 5வது பந்து ராயின் கையில் பட்டு தோனி அதை கேட்ச் பிடித்தார். பந்து கிளவுஸில் பட்டது எல்லோருக்கும் நன்றாக காதில் கேட்டது.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் நடுவர் இதற்கு விக்கெட் கொடுக்கவில்லை. இதனால் கோலி ரிவ்யூ கேட்க ஆசைப்பட்டார். பாண்டியாவும் ரிவ்யூ கேட்க ஆசைப்பட்டார். ஆனால் தோனி ரிவ்யூ கேட்க வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனால் கோலியும் தோனியின் பேச்சை தட்டாமல் ரிவ்யூ கேட்காமல் விட்டுவிட்டார். ஆனால் ரிப்ளேயின் போது அது விக்கெட்தான் என்பது தெரிந்தது.

கோலி கோபம்

கோலி கோபம்

இந்த ரிப்ளேயை பார்த்ததும் கோலி அதிர்ச்சி அடைந்தார். அவர் தனது கோபத்தை வெளிப்படையாக முகத்தில் காட்டிக்கொண்டார். அதே சமயம் இதை பார்த்துவிட்டு தோனி கொஞ்சம் இறுக்கமாக முகத்தை வைத்து இருந்தார். என்ன செய்வது, என்ன சொல்வது என்று தெரியாமல் தோனி இருந்தார். இவர்கள் இருவருக்கும் இடையில் இதனால் சின்ன உரசல் ஏற்பட்டதா என்று இணையத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

ஏற்கனவே என்ன

ஏற்கனவே என்ன

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் தோனி இப்படித்தான் செய்தார். அதில், குல்தீப் போட்ட ஓவர் ஒன்றில் தோனி ஒரு தவறு செய்தார். பாகிஸ்தானின் பாபர் அசம் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தார். அப்போது சரியாக பாபர் குல்தீப் ஓவரில் எல்பிடபில்யூ முறையில் அவுட்டானார்.ஆனால் நடுவர் இதற்கு அவுட் கொடுக்கவில்லை.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இதை சரியாக கவனித்த கோலி டிஆர்எஸ் எடுக்கலாமா என்று தோனியிடம் ஆலோசனை கேட்டார். ஆனால் தோனி ரிவ்யூ கேட்க வேண்டாம் என்று கூறிவிட்டார். தோனியின் பேச்சை கேட்டு கோலி எல்பிடபிள்யூ கேட்கவில்லை. ஆனால் ரீப்ளேயில்தான் பந்து பேட்டில் படவில்லை, பேடில்தான் பட்டது என்பது தெரிந்தது.

கோலி

கோலி

இப்படி தொடர்ச்சியாக தோனி இரண்டு போட்டிகளில் வரிசையாக ரிவ்யூ எடுக்கும் போது தவறு செய்து இருக்கிறார். அனைத்தும் முக்கியமான விக்கெட்டுகள். இனி வரும் காலங்களில் தோனியை மட்டுமே கோலி நம்பிக்கொண்டு இருக்க கூடாது. அவருக்கு விக்கெட் என்று தெரிந்தால் கண்டிப்பாக அவர் ரிவ்யூ கேட்க வேண்டும்... ஏனென்றால் அவர்தான் இந்திய அணியின் கேப்டன்!

Story first published: Monday, July 1, 2019, 11:38 [IST]
Other articles published on Jul 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+