Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பின்னுக்கு சென்ற இந்திய அணி.. உலகக் கோப்பை தோல்வியால் நேர்ந்த அதிர்ச்சி.. சுதாரிக்க வேண்டும்!

Recommended Video

Captain Rohit : பறிபோகும் கோலியின் பதவி?.. பிசிசிஐ முடிவிற்கு பரபரப்பு காரணம்!- வீடியோ

லண்டன்: உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்தது இந்திய அணிக்கு ஐசிசி புள்ளிகள் பட்டியலில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்தியா இதிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி தோல்வியுடன் வெளியேறியது. லீக் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்ற இந்திய அணி செமி பைனல் போட்டியில் தோல்வி அடைந்தது.

இந்த தொடரில் அசத்தலாக வெற்றிபெற்று இங்கிலாந்து அணி கோப்பையை வென்றுள்ளது. ஒரு ரன் கூட வித்தியாசம் இல்லாமல் நியூசிலாந்து அணி தோல்வியை சந்தித்துள்ளது.

வெளியீடு

வெளியீடு

இந்த நிலையில் தற்போது ஐசிசி புதிய புள்ளிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒரு நாள் அணிகளுக்கான மற்றும் வீரர்களுக்கான புள்ளிகள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் பல சுவாரசியமான விஷயங்கள் அடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பேட்ஸ்மேன்

பேட்ஸ்மேன்

ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. இதில் தொடர்ந்து 886 புள்ளிகளுடன் கோலி முதலிடத்தில் இருக்கிறார். 881 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா இரண்டாம் இடத்திலும் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்கள்.

பவுலர் என்ன

பவுலர் என்ன

அதேபோல் பவுலர்களிலும் எந்த விதமான மாற்றமும் இல்லை. இந்திய வீரர் பும்ரா 809 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் 740 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா 694 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இங்கிலாந்து அணி ஒருநாள் அணிகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் நடந்த போது இந்தியாதான் இதில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போது 125 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடத்திலும், இந்தியா 122 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து 112 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

என்ன வாய்ப்பு

என்ன வாய்ப்பு

அடுத்த மாதம் இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் தொடர் விளையாட செல்கிறது. அப்போது இந்தியா சரியாக விளையாடி சுதாரித்துக் கொண்டு தொடரை கைப்பற்றினால், கண்டிப்பாக மீண்டும் இதில் முதலிடம் பிடிக்க முடியும்.

Story first published: Tuesday, July 16, 2019, 15:06 [IST]
Other articles published on Jul 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+