அல்லாவும் எங்களுடன்தான் இருந்தார்.. இங்கிலாந்து கேப்டன் இயான் ஒரே அடி.. ஏன் அப்படி சொன்னார்?
Recommended Video
தங்கள் நாட்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து வென்றுள்ளது. முதல்முறையாக இங்கிலாந்து உலகக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன் ஆகியுள்ளது.
50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியனாக இங்கிலாந்து மகுடம் சூடி இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு முதல் உலகக் கோப்பையை வாங்கி கொடுத்த அணி என்ற பெருமையை அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கன் பெற்றுள்ளார்.

யார் அவர்
பொதுவாக இங்கிலாந்தில் ''லக் ஆப் ஐரிஷ்மேன்'' என்ற வாசகம் பிரபலம். இங்கிலாந்தில் ஐரிஷ் நாட்டை சேர்ந்தவர்கள் அதிர்ஷ்டசாலியான நபர்கள் என்று கூறப்படுவது வழக்கம். இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனும் ஐரிஷ் நாட்டை சேர்ந்தவர்தான். ஆம் அவர் இங்கிலாந்து நாட்டை பூர்வீகமாக சேர்ந்தவர் கிடையாது.

என்ன கேட்டார்
இதையடுத்து நேற்று வெற்றியை தொடர்ந்து இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனிடம் செய்தியாளர் முக்கியமான கேள்வி ஒன்றை கேட்டார். நீங்கள் ஐரிஷ் நாட்டை பூர்வீகமாக கொண்டவர். ''லக் ஆப் ஐரிஷ்மேன்'' என்பதுதான் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவியது என்று நினைக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டார்.

என்ன பதில்
இதற்கு பதில் அளித்த இயான் மோர்கன், அப்படி சொல்ல முடியாது. நான் போட்டிக்கு முன்பாக அடில் ரஷித்திடம் சென்று பேசினேன். அவர் அல்லா நம்முடன் இருப்பதாக கூறினார். ஆம் அவர் எங்களுடன் இருந்தார். எங்களுக்கு சூழ்நிலைகள் மிக சரியாக அமைந்தது. இப்படி கடவுள் எல்லோரும் எங்கள் பக்கம் இருந்ததாக கருதுகிறேன்.

பல மதம்
எங்கள் அணியில் பல மதத்தை சேர்ந்த, பல நாட்டை சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு அது பெரிய உதவியாக இருந்தது. அதுவே நாங்கள் கோப்பையை வீட்டிற்கு கொண்டு வர காரணமாக அமைந்தது என்று இயான் மோர்கன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications