இந்தியா போல கிடையாது.. நீங்களே இப்படி கைவிடலாமா? உலகக் கோப்பை பைனலில் நடந்த திடுக் நிகழ்வு!
Recommended Video
லண்டன்: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று கிரிக்கெட் உலகில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகக் கோப்பை இறுதிப்போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது இறுதிப்போட்டி நடக்கிறது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் போட்டி நடந்து வருகிறது. நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்த போதிலும் நிதானமாக ஆடி வருகிறது.

நிறைய பேர்
இந்த நிலையில் இன்றைய போட்டியை காண நியூசிலாந்து ரசிகர்களை விட நிறைய இங்கிலாந்து ரசிகர்கள் அதிகம் வந்து இருக்கிறார்கள். இங்கிலாந்து அணியின் ரசிகர்கள்தான் அதிக பேர் மைதானத்தில் உள்ளனர். கடைசி நேரத்தில் டிக்கெட் வாங்கிய இந்திய ரசிகர்கள் எல்லோரும் அதை விற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வயதானவர்கள்
அதே சமயம் இன்று மைதானத்திற்கு வந்திருக்கும் இங்கிலாந்து ரசிகர்கள் பெரும்பாலானோர் வயதானவர்கள். சில 60 வயதை தாண்டிய நபர்கள். பலருக்கும் சராசரியாக 60+ வயது நிரம்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன மோசம்
இவர்கள் யாரும் இன்றைய போட்டியில் பெரிய அளவில் உற்சாமாக காணப்படவில்லை. இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியும் கூட இங்கிலாந்து ரசிகர்கள் உற்சாகமாக காணப்படவில்லை. ஒரு விக்கெட்டுக்கு கூட ரசிகர்கள் எழுந்து நின்று உற்சாகமாக கத்தவில்லை. இதனால் மைதானமே பொலிவிழந்து காணப்படுகிறது.

ஏன் இப்படி
இது உலகக் கோப்பை இறுதிப் போட்டி போலவே இல்லை. வீரர்கள் வரிசையாக விக்கெட்டை இழந்தாலும் இங்கிலாந்து ரசிகர்கள் அமைதியாக இருக்கிறார்கள். அங்கு என்ன டெஸ்ட் கிரிக்கெட் போட்டியா நடைபெறுகிறது. எல்லோரும் ஏன் இப்படி சிலை போல இருக்கிறார்கள். இங்கிலாந்து ரசிகர்களே அவர்களின் அணியை இப்படி கைவிட கூடாது என்று பலர் விமர்சனம் வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications