Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு டீம் போய்விட்டது.. இன்னும் ஒரு டீம் இருக்கிறது.. உலகக் கோப்பையில் நடக்கும் அடுத்த திருப்பம்?

Recommended Video

WORLD CUP 2019 | இங்கிலாந்து வெளியேற்றம்?.. உலகக் கோப்பையில் நடக்கும் திருப்பம்- வீடியோ

லண்டன்: இந்த உலகக் கோப்பை தொடரில் மிக முக்கியமான அணி ஒன்று பெரிய ஏமாற்றம் அளித்து, செமி பைனலுக்கு செல்ல முடியாமல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டு இருக்கிறது.

உலகக் கோப்பை தொடர் நாளுக்கு நாள் பரபரப்பு கூடிக்கொண்டே செல்கிறது. போட்டிகள் தொடக்கத்தில் கொஞ்சம் மந்தமாக சென்றாலும் தற்போது நல்ல விறுவிறுப்பாக செல்கிறது.

முக்கியமாக, சிறிய அணிகள், பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து வருகிறது. வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் எப்போது யாரை வீழ்த்தும் என்றே தெரியாத நிலை உள்ளது.

யார் வெளியேறும்

யார் வெளியேறும்

இப்படி இருக்கும் நிலையில்தான் எல்லோரும் கோப்பை அடிக்கும் என்று நினைத்த அணி ஒன்று இந்த தொடரில் இருந்தே பாதியில் வெளியேறும் நிலை ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அது வேறு எந்த அணியும் இல்லை, உலகக் கோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணிதான். ஆம் இங்கிலாந்து அணி, இந்த தொடரில் செமி பைனலுக்கு தேர்வு பெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போகும் என்று கணித்துள்ளனர்.

எப்படி கணிப்பு

எப்படி கணிப்பு

இதை கிரிக்கெட் வல்லுநர்கள் சாதாரணமாக கணிக்கவில்லை. ஏற்கனவே இந்த உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணி வெளியேறுவது உறுதியாகிவிட்டது. அந்த அணி 7 போட்டிகளில் 5 தோல்வி அடைந்துவிட்டது. இன்னும் இரண்டு போட்டிகளில் மட்டுமே அந்த அணி விளையாட வேண்டும். அதில் விளையாடிய பின் அந்த அணி வீட்டிற்கு செல்லலாம்.

இங்கிலாந்து எப்படி

இங்கிலாந்து எப்படி

இங்கிலாந்து அணி தற்போது புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறது. 6 போட்டிகளில் 4 போட்டிகளில் அந்த வென்றுள்ளது. 2 போட்டிகளில் அந்த அணி தோல்வி அடைந்து இருக்கிறது. இதனால் 8 புள்ளிகளுடன் அந்த அணி 4வது இடத்தில் இருக்கிறது.இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறும் என்பதற்கு இரண்டு விதமான காரணங்கள் முன் வைக்கப்படுகிறது.

இரண்டு காரணங்கள்

இரண்டு காரணங்கள்

அதன்படி

1. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணி நல்ல பார்மிற்கு திரும்பி இருக்கிறது. இதனால் அந்த அணி எப்போது வேண்டுமானாலும் 4வது இடத்திற்க்கு நுழைய வாய்ப்பு உள்ளது.

2. இங்கிலாந்து அடுத்து மோத போகும் அணிகள் மிகவும் முக்கியமான அணிகள். இதனால் அந்த அணிகளிடம் இங்கிலாந்து வெற்றிபெறுமா என்பது சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள்.

எப்படி முக்கியம்

எப்படி முக்கியம்

கடந்த 27 வருடமாக, அதாவது 6 உலகக் கோப்பை போட்டியில் ஒரு முறை கூட இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை வென்றது கிடையாது. எவ்வளவு நல்ல வாய்ப்பு கிடைத்தும் கூட, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை இங்கிலாந்து உலகக் கோப்பையில் வீழ்த்தியது இல்லை. இதுதான் இங்கிலாந்து அணிக்கு முக்கிய பிரச்சனையாக முடிய உள்ளது.

போட்டிகள் நடக்கிறது

போட்டிகள் நடக்கிறது

இந்த மூன்று அணிகளைத்தான் வரிசையாக இங்கிலாந்து அணி எதிர்கொள்ள இருக்கிறது. வரிசையாக மூன்று அணிகளுக்கும் எதிராக இங்கிலாந்து தோல்வி அடைந்தால் கண்டிப்பாக உலகக் கோப்பை தொடரில் இருந்தே வெளியேறும். தென்னாப்பிரிக்கா போலவே இந்த அணியும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் என்று கூறுகிறார்கள். என்ன நடக்கிறது என்று இன்னும் 10 நாட்களில் தெரிந்துவிடும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பான வண்ணமயமான புகைப்படங்களை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்!

Story first published: Monday, June 24, 2019, 11:06 [IST]
Other articles published on Jun 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+