இங்கிலாந்துக்காக பவுலிங் போட்ட சச்சின் பையன்.. அர்ஜுனை வைத்து திடுக் பிளான்.. மிஸ் செய்த இந்தியா!
லண்டன்: இங்கிலாந்து அணிக்காக வலைப்பயிற்சியின் போது சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பந்து வீசி வருகிறார். இதற்கு காரணம் என்ன என்று தற்போது விவரங்கள் வெளியாகி உள்ளது.
இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது இந்திய அணியில் இடம் கிடைப்பதற்காக காத்து இருக்கிறார். இவர் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்.
இந்திய அணியில் இடம் கிடைப்பதற்காக சச்சின் இவருக்கு பார்த்து பார்த்து பயிற்சி வழங்கி வருகிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவில் கூட சென்று இவர் பயிற்சி எடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன செய்கிறார்
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்காக வலைப்பயிற்சியின் போது அர்ஜுன் டெண்டுல்கர் பந்து வீசி வருகிறார். இரண்டு நாட்களாக இவர் இங்கிலாந்து அணியுடன் வலை பயிற்சி செய்து வருகிறார். இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களுக்கு இவர் பந்து போடுவதுதான் பணி, பயிற்சியாளர் சொல்வது போல வீரர்களுக்கு இவர் பந்து வீச வேண்டும்.

ஏன் அப்படி
இன்னும் சர்வதேச போட்டிகளில் விளையாடாத இவர் இப்போதே 145+ வேகத்தில் பந்து வீசுகிறார். அதேபோல் இவரின் ஸ்டைல் அப்படியே ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க் போல இருக்கிறது. இடது கையில் பந்து வீசும் வீரர் நன்றாக ஸ்விங் பந்து போடுகிறார். அதே சமயம் யார்க்கரும் நன்றாக வீசுகிறார்.

அழைத்து வைத்து வீசினர்
இவரை சச்சின் பயிற்சிக்காக அனுப்பவில்லை என்கிறார்கள். அர்ஜுன் வேண்டும் என்று இங்கிலாந்து அணியே கேட்டு இருக்கிறது. அதனால்தான் அவர் சென்றுள்ளார். மிட்சல் ஸ்டார்க் பவுலிங்கிற்கு எதிராக வியூகங்களை வகுக்க இவரை அழைத்து இருக்கிறார்கள். இருவரின் ஸ்டைலும் ஒரே மாதிரி இருப்பதால், அர்ஜுனை வைத்து ஸ்டார்க்கை சமாளிக்க பழகலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் இந்தியா
இந்திய அணிக்காக உலகக் கோப்பைக்கு ஆஸ்திரேலியா தொடரில் முன் சில போட்டிகளில் வலைப்பயிற்சியில் அர்ஜுன் பந்து வீசி உள்ளார். ஆனால் உலகக் கோப்பையின் போது பயிற்சியில் அவர் வீசவில்லை. இதனால் ஆஸ்திரேலிய போட்டியின் போது பயிற்சியில் இந்தியா இவரை பயன்படுத்தி இருக்கலாம் என்று இப்போது ரசிகர்கள் கூறுகிறார்கள். அப்போது இந்தியா நல்ல வாய்ப்பை மிஸ் செய்து விட்டது என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications