For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படி ஒரு டைவ் பார்த்ததே இல்லை.. மிரள வைத்த இங்கிலாந்து வீராங்கனை.. வீரர்கள் சல்யூட்.. வீடியோ!

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இங்கிலாந்து வீராங்கனை பிடித்த கேட்ச் ஒன்று பெரிய வைரலாகி இருக்கிறது.

Recommended Video

Fran Wilson catch | மிரள வைத்த இங்கிலாந்து வீராங்கனை.. வீரர்கள் சல்யூட்

லண்டன்: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இங்கிலாந்து வீராங்கனை பிடித்த கேட்ச் ஒன்று பெரிய வைரலாகி இருக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்கியது. அப்போதில் இருந்து இந்த தொடரில் நிறைய வித்தியாசமான சம்பவங்கள் நடந்து வருகிறது.

இதில் முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக நடந்தது. நேற்று நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது.

எளிதாக வெற்றி

எளிதாக வெற்றி

இந்த போட்டியில் எளிதாக தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் 34.1வது ஓவரில் இங்கிலாந்து வீரர் அடில் ரஷீத் களமிறங்கி பவுலிங் போட்டார். அந்த ஓவரில் அவர் எப்படியாவது விக்கெட் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அவர் நினைத்தது போலவே தென்னாபிரிக்கா வீரர் ஆண்டில் பெலுக் வாயோ சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தார்.

விக்கெட் ஆனார்

ஆனால் பந்து ஸ்விங் ஆனதில் அவரால் சிக்ஸ் அடிக்க முடியவில்லை. அப்போது திடீர் என்று உள்ளே எகிறி குதித்து வந்த பென் ஸ்டோக்ஸ், பவுண்டரில் லைனுக்கு அருகே பந்தை ஒற்றைக் கையில் பிடித்தார். ஒற்றைக் கையில் பிடித்தது மட்டுமில்லாமல், டைவ் அடித்து, உருண்டு விழுந்தார். இது மிக மிக கடினமான கேட்ச் என்பது வீடியோவை பார்த்தாலே தெரியும்.

வாவ் விக்கெட்

வாவ் விக்கெட்

இந்த கேட்ச் இணையம் முழுக்க வைரலானது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இதுதான் சிறந்த கேட்ச் என்று அப்போது கூறப்பட்டது. ஆனால் அதைவிட சிறந்த கேட்ச் ஒன்று பிடிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதை பிடித்தது இங்கிலாந்து வீரர் கிடையாது இங்கிலாந்து வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன கேட்ச்

என்ன கேட்ச்

அதன்படி நேற்று இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையில் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில்தான் இங்கிலாந்து வீராங்கனை கிராஸ் போட்ட இரண்டாவது ஓவரில் பிரான் வில்சன் கேட்சை பிடித்தார். மேத்தியூஸ் என்ற வீராங்கனை போட்ட பந்தை அவர் கேட்ச் பிடித்தார்.

எப்படி பிடித்தார்

பெரிய டைவ் அடித்து, பறந்து அவர் இந்த கேட்சை பிடித்தார். இதுதான் கிரிக்கெட் உலகில் மிக சிறந்த கேட்ச் என்கிறார்கள். ஆம் பென் ஸ்டோக்ஸ் பிடித்த கேட்ச் எல்லாம் சிறந்த கேட்ச் கிடையாது. இதுதான் சிறப்பான கேட்ச் என்று பலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.

Story first published: Friday, June 14, 2019, 17:00 [IST]
Other articles published on Jun 14, 2019
English summary
ICC World Cup 2019: England woman player catch people go shocked by her dive - video.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+