அந்த 2 சிக்ஸர்கள்.. எதிர்பார்க்காத ஷாட் அடித்த மோர்கன்.. முதல் போட்டியிலேயே வைரலான வீடியோ!
Recommended Video
லண்டன்: இங்கிலாந்து வீரர் இயான் மோர்கன் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து வித்தியாசமான இரண்டு சிக்ஸர்களை அடித்து ரசிகர்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிவிட்டது. . இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையில் தற்போது போட்டி நடக்கிறது.
லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணி
இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஜானி பிரைஸ்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை இம்ரான் தாஹிர் வீசினார். தொடக்கத்தில் இருந்து வலுவான பார்ட்னர்ஷிப்கள் மூலம் இங்கிலாந்து ரன்களை குவித்து வருகிறது. அதே சமயம் சரியான இடைவெளியில் விக்கெட்டும் விழுந்து வருகிறது.

முதல் ஓவரிலேயே மோசம்
போட்டியின் தொடக்கத்தில் இங்கிலாந்து முதல் ஓவரிலேயே திணறியது. இரண்டாவது பந்திலேயே விக்கெட் விழுந்தது. ஜானி பிரைஸ்ஸ்டோ தன்னுடைய விக்கெட்டை இழந்தார். தாஹிர் பந்தில் ஜானி டக் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணி
ஆனால் அதன்பின் இங்கிலாந்து அணி சுதாரித்துக் கொண்டது. வரிசையாக நலன் ஷாட்களை ஜேசன் ராய், ஜோ ரூட் இணை ஆடி வந்தது. இவர்கள் வேகமாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்கள் இருவரும் 50 ரன்களை கடந்து மிகவும் வலுவாக ஆடிக்கொண்டு இருந்தனர்.

ஜேசன் ராய் எப்படி
அதன்பின் ஜேசன் ராய் 54 ரங்களிலும், ஜோ ரூட் 51 ரன்களிலும் அவுட் ஆனார்கள். இதனால் இங்கிலாந்து பேட்டிங் நிலை குலைந்தது. ஆனால் அப்போதுதான் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் வந்தார். களத்திற்குள் வந்தவுடன் நிதானமாக ஆடாமல் அதிரடி காட்ட தொடங்கினார்.

லுங்கி நிகிடி
இந்த 26வது ஓவரில் லுங்கி நிகிடி பந்தில் மோர்கன் சிக்ஸ் அடித்தார். ஆப் சைட் திசையில் சிக்ஸ் அடித்தார். இந்த் தொடரில் அடிக்கப்பட்ட முதல் சிக்ஸ் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிக்ஸ் அடித்தவுடன், இங்கிலாந்து ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர். முதல் சிக்ஸ் கொடுத்த அதிர்ச்சியில் லுங்கி உறைந்து போனார்.
சிக்ஸ் அதிர்ச்சி
ஆனால் லுங்கிக்கு மேலும் அதிர்ச்சி அதற்கு அடுத்த பந்தில் காத்து இருந்தது. அதற்கு அடுத்த பந்திலேயே மோர்கன் மீண்டும் சிக்ஸ் அடித்தார். இந்த முறை லெக் திசையில் அவர் சிக்ஸ் அடித்து அசத்தினார். இந்த வித்தியாசமான ஷாட்டை களத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை. இதை தற்போது அங்கிருக்கும் பார்வையாளர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

சூப்பர் மோர்கன்
மோர்கன் அடுத்த பந்தில் இன்னொரு சிக்ஸ் அடிக்க முயற்சி செய்தார். இதன் மூலம், ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்கலாம் என்று அவர் நினைத்தார். ஆனால் அவரால் அந்த ஸ்லோ பாலை தொட முடியவில்லை. இதனால் சிக்ஸ் ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்கும் வாய்ப்பை அவர் இழந்தார்.


Click it and Unblock the Notifications