Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மறுபடியுமா?.. தப்பு பண்ணிட்டோமே.. போட்டி ஒத்திவைக்கப்பட்டதற்கு பின் இப்படி ஒரு விஷயம் இருக்கா?

Recommended Video

மழையால் போட்டி மாற்றம்... கவலையில் ரசிகர்கள்

லண்டன்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை செமி பைனல் போட்டி ஒத்திவைக்கப்பட்டதற்கு பின் முக்கியமான சிக்கல் ஒன்று இருக்கிறது. ஆனால் இது கிரிக்கெட் வீரர்களுக்கான சிக்கல் கிடையாது, ரசிகர்களுக்கானது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான செமி பைனல் போட்டி நேற்று நடந்தது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா வெற்றிகரமாக 46 ஓவர்கள் நேற்று வீசியது. போட்டியும் நல்ல விறுவிறுப்பாக சென்றது.

மழை

மழை

இந்த போட்டி துவங்கும் முன்பே, மழை பெய்ய போகிறது என்று வானிலை அறிவிப்புகள் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போட்டி நடந்து கொண்டு இருக்கும்போது தொடக்கத்தில் மழை பெய்யவில்லை. வானம் மட்டும் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் போக போக மழை பெய்தது.

இன்று

இன்று

இந்த நிலையில் நேற்று நியூசிலாந்து 46.1 ஓவர்கள் பிடித்து 5 விக்கெட்டை இழந்து வெறும் 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனால் நேற்று போட்டி இன்று ஒத்தி வைக்கப்பட்டது. இன்று மாலை மீண்டும் மீதமுள்ள போட்டி நடக்கும்.

என்ன கணக்கு

என்ன கணக்கு

இதில் என்ன சிக்கல் என்றால், இந்த போட்டியை நேற்று காண வந்த ரசிகர்கள் இன்றும் போட்டியை பார்க்கலாம். நேற்று அவர்கள் பயன்படுத்திய அதே டிக்கெட்டை இன்றும் பயன்படுத்தலாம். இதை காட்டினால் மட்டுமே அவர்கள் போட்டியை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான அறிவிப்பு நேற்று போட்டியின் போதே வெளியிடப்பட்டது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் நேற்று சிலர் போட்டிக்கு வந்த சந்தோசத்தில் டிக்கெட்டை கிழித்து போட்டு இருக்கிறார்கள். இவர்கள் செய்த தவறால் இன்று அவர்கள் போட்டியை காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் நேற்று விடுமுறை எடுத்து போட்டியை காண வந்த ரசிகர்கள் இன்றும் அதேபோல் காண வருவார்களா என்பது சந்தேகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்று மைதானத்தில் பெரிய அளவில் கூட்டம் இருக்காது என்கிறார்கள்.

Story first published: Wednesday, July 10, 2019, 12:55 [IST]
Other articles published on Jul 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+