For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும் மீண்டும் அதே தவறை செய்த தோனி.. அதிர்ந்த மைதானம்.. களத்தில் நிகழ்ந்த புதிய சர்ச்சை!

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி செய்த தவறு ஒன்று பெரிய சர்ச்சையாகி இருக்கிறது.

Recommended Video

களத்தில் நிகழ்ந்த புதிய சர்ச்சை! இன்றும் அதே தவறை செய்தாரா தோனி ?

லண்டன்: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி செய்த தவறு ஒன்று பெரிய சர்ச்சையாகி இருக்கிறது.

மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இந்தியாவிற்கு எதிரான போட்டி தற்போது இங்கிலாந்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி நடக்கும் ஓல்ட் டிரபோர்ட் கிரிக்கெட் மைதானம் பேட்டிங் பிட்ச்.

இதில் இந்திய வீரர்கள் எல்லோரும் வரிசையாக களமிறங்கி அவுட்டாகி வருகிறார்கள். கோலி மட்டும்தான் போட்டியில் பொறுப்புடன் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக மோசம்

மிக மோசம்

இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக சொதப்பி வருகிறது. ரோஹித் சர்மா 18 ரன்கள் இருக்கும் போது அவுட்டானார். அதே போல் கே எல் ராகுல் 48 ரன்கள் இருக்கும் நேரத்தில் அவுட்டானார். விஜய் சங்கரும் 14 ரன்களுக்கு அவுட்டானார். அதன்பின் கேதார் 7 ரன்களுக்கு அவுட்டானார்.

கோலி மட்டும்

கோலி மட்டும்

கோலி மட்டும் இந்திய அணியில் அதிரடியாக ஆடி வந்தார். இவரும் 72 ரன்கள் இருக்கும் போது தேவையில்லாமல் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்த போட்டியிலும் தோனி மிகவும் நிதானமாக ஆடினார். இந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் போட்ட ஓவரில் தோனி ஸ்டம்பிட் ஆக சென்றார். தேவையில்லாமல் இறங்கி வந்து ஆட முயன்று அவுட்டாக முயன்றார்.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் ஸ்டம்பிட் ஆகாமல் தப்பித்தார். மேற்கு இந்திய தீவுகள் கீப்பர் அந்த பந்தை விட்டுவிட்டு, தவறி ஸ்டம்பிட் செய்வதற்கு பதிலாக கிளவுசால் ஸ்டம்பை அடித்தார். இதனால் தோனி தப்பித்தார். கடைசி ஆப்கானிஸ்தான் போட்டியிலும் தோனி இப்படித்தான் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் போட்டியில் இவர் ஸ்டம்பிட் முறையில்தான் அவுட்டானார்.

மீண்டும் அப்படியா

மீண்டும் அப்படியா

இன்று மீண்டும் அவர் அப்படி அவுட்டாக ஆசைப்பட்டது பெரிய சர்ச்சையானது. களத்தில் இந்த சம்பவம் பெரிய வைரலானது. பல பேர் தோனிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். தோனி ஏன் இப்படி பொறுப்பே இல்லாமல் ஆடுகிறார் என்று பலர் விமர்சனம் வைத்து வருகிறார்கள்.

Story first published: Thursday, June 27, 2019, 23:28 [IST]
Other articles published on Jun 27, 2019
English summary
ICC World Cup 2019: Fans getting angry at Dhoni after played the worst shot in WI match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+