தோனிக்கு வயதாகிவிட்டது.. உடனே ஓய்வை அறிவிக்க வேண்டும்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்.. ஏன்?
லண்டன்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோனி ஆடிய ஆட்டம் பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போட்டியில் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி மோசமாக சொதப்பி வருகிறது. இந்த போட்டியில் தோனி தொடக்கத்தில் இருந்தே நிதானமாக ஆடி வந்தார்.
அதிரடியாக ஆட வேண்டிய நேரத்தில் அதிக பந்துகளை அவர் குடித்தார். இது இந்தியாவின் ரன் ரெட்டை வெகுவாக பாதித்தது. அப்போதே தோனிக்கு எதிராக ரசிகர்கள் கமெண்ட் செய்ய தொடங்கிவிட்டார்கள்.

என்ன விமர்சனம்
தோனி 52 பந்தில் 28 ரன்கள் அடித்து இருந்த போது அவுட்டானார். இவர் ரஷீத் கான் பந்தில் அவுட்டானார். கீப்பர் இஷ்ரத் அலி கில்தோனியை ஸ்டம்பிட் செய்தார். தோனியின் இந்த ஆட்டத்தை பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இப்படித்தான்
தோனியின் இன்றைய போட்டி இப்படித்தான் இருந்தது.
இப்போதே ஓய்வு
தோனி நீங்கள் இப்போதே ஓய்வு பெறுங்கள். உங்களுடைய மோசமான பேட்டிங் காரணமாக இந்திய அணியை தோல்வி அடைய செய்ய வேண்டாம்.
ஏன்
இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால், இப்போதே ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று இவர் கூறியுள்ளார்.
நிறைய செய்து இருக்கிறார்
தோனி இந்தியாவிற்காக நிறைவு செய்து இருக்கிறார். ஆனால் அதெல்லாம் இப்போது பெரிய விஷயம் இல்லாமல் போய்விட்டது என்று இவர் தோனிக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.
வயதாகிவிட்டது
தோனிக்கு வயதாகிவிட்டது. அவர் வயதான வீரர்களுக்கு எதிராக எடுத்தது போல மிக கடுமையான முடிவுகளை தற்போது எடுக்க வேண்டும் என்று இவர் கூறியுள்ளார்.
நீக்க வேண்டும்
எந்த விதமான ரிசல்ட் வந்தாலும், தோனியை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று இவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications