Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரும் வருகிறாரா? டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.. இந்திய அணிக்கு நேற்று இரவே கிடைத்த சந்தோச செய்தி!

லண்டன்: வங்கதேசம் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடக்க உள்ள நிலையில், இந்திய அணிக்கு நல்ல செய்தி ஒன்று கிடைத்து உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று முக்கியமான நாள். இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையில் இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

வங்கதேசம் அணி இந்த முறை நல்ல வலுவான அணியாக இருக்கிறது. அதனால் இன்று நடக்கும் போட்டி இந்த தொடரில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்த போகும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

என்ன காயம்

என்ன காயம்

கடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பவுலிங்கின் போது புவனேஷ்வர்குமார் 5வது ஓவரில் காயம் பட்டார். பிட்சில் அவர் சென்று கொண்டு இருக்கும் போதே வழுக்கியதால் காயத்திற்கு உள்ளானார். இதனால் 4 பந்துகள் போட்ட அவர் பாதியில் பெவிலியன் திரும்பினார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

ஷமி ஆடினார்

ஷமி ஆடினார்

இதனால் இவர் மூன்று போட்டிகளாக விளையாடவில்லை. இவருக்கு பதிலாக இந்திய அணிக்குள் ஷமி கொண்டு வரப்பட்டார். அணிக்குள் வந்த ஷமி தற்போது நன்றாகவே ஆடி வருகிறார். மூன்று போட்டிகளில் மட்டும் விளையாடிய இவர் 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக தற்போது புவனேஷ்வர்குமார் தனது உடல் தகுதியை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.

நேற்று மருத்துவர்கள்

நேற்று மருத்துவர்கள்

நேற்று மருத்துவர்கள் இவரை சோதித்துவிட்டு இவரை விளையாட அனுமதித்து இருக்கிறார்கள். இந்திய அணியின் தேர்வு வாரியமும் இவர் விளையாட ஓகே சொல்லி இருக்கிறது. இதனால் இந்திய அணி நிர்வாகம் புதிய சந்தோசத்தில் இருக்கிறது. புவனேஷ்வர்குமார் அணிக்கு வந்தால் அணியின் பவுலிங் மேலும் பலம் பெறும் என்று கருதப்படுகிறது.

இன்னொரு நல்ல செய்தி

இன்னொரு நல்ல செய்தி

இந்திய அணியில் நேற்றுதான் விஜய் சங்கர் காயம் காரணமாக நீக்கப்பட்டார். அவருக்கு பதில் வலுவான மயங்க் அகர்வால் எடுக்கப்பட இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் ஜடேஜா வேறு அணியில் எடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இப்படி தொடர் திருப்பங்கள் மற்றும் செய்திகளால் இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Story first published: Tuesday, July 2, 2019, 8:08 [IST]
Other articles published on Jul 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+