நம்ம டீம் இன்னைக்கு தோற்கணும்.. அதுதான் நல்லது.. இந்திய ரசிகர்கள் சிலர் சொன்ன ஐடியா.. என்ன தெரியுமா?
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெற கூடாது, தோல்வி அடைய வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து கண்டிப்பாக வெல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது.
ஆனால் இந்தியாதான் வெற்றிபெற வேண்டும் என்று நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் இருக்கிறது.

செல்ல முடியும்
இன்று நடக்கும் போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்தால் பெரும்பாலும் அந்த அணி செமி பைனலுக்கு செல்லும் வாய்ப்பில் 90 சதவிகிதத்தை இழந்துவிடும். அதே சமயம் பாகிஸ்தான் அணிக்கு செமி பைனலுக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகும். இதனால்தான் இன்றைய போட்டி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

என்ன ஆசை
இதனால்தான் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும் என்று பாகிஸ்தான், வங்கதேசம் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். அப்படி நடந்தால் இந்த அணிகளுக்கு செமி பைனலுக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகமாகும். இதனால் இந்தியா இன்று கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என்று பல நாட்டு ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவை சேர்ந்த சில ரசிகர்கள் இந்தியா தோல்வி அடைய வேண்டும் என்கிறார்கள்.

ஏன் தெரியுமா
இந்தியா இன்று இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழக்கும். இங்கிலாந்து வென்றால், பாகிஸ்தான் வெளியேறும் சூழ்நிலை உருவாகும், இங்கிலாந்து செமி பைனலுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். இதனால் இந்தியா இன்று மட்டும் தோல்வி அடைய வேண்டும் என்று சில ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் எதிர்ப்பு
ஆனால் இவர்கள் எல்லாம் பாகிஸ்தான் எதிர்ப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுத்தமான கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோரும் கண்டிப்பாக இந்த போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்று கூறி வருகிறார்கள். திமிராக பேசி வரும் இங்கிலாந்து வீரர்களுக்கு தக்க பாடமாக அது இருக்கும் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications