For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி சரியில்லை.. ஒழுங்காக ஆடவில்லை.. அட்வைஸ் செய்த சச்சின்.. கொதித்த ரசிகர்கள்.. பெரும் சண்டை!

இந்திய வீரர் தோனி சரியாக ஆடவில்லை என்று முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் செய்த விமர்சனம் பெரிய சர்ச்சையாகி உள்ளது.

லண்டன்: இந்திய வீரர் தோனி சரியாக ஆடவில்லை என்று முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் செய்த விமர்சனம் பெரிய சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக நிறைய பேர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் இந்தியா இடையில் சனிக்கிழமை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தொடக்கத்தில் இருந்தே நிதானமாக ஆடி வந்தார்.

நிதானம் என்றால் அவர் வாழ்க்கையில் இதுவரை இவ்வளவு நிதானமாக ஆடியதே கிடையாது. அதேபோல் அவர் ஸ்பின் பவுலர்கள் போட்ட பந்துகளிலும் அதிகம் திணறினார். தோனி 52 பந்தில் 28 ரன்கள் அடித்து இருந்த போது அவுட்டானார்.

என்ன ஆட்டம்

என்ன ஆட்டம்

இவரின் ஆட்டம் இந்திய ரசிகர்களை பெரிதும் பொறுமை இழக்க செய்தது. இதுகுறித்து தற்போது சச்சின் கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில், தோனி ஒரு மூத்த வீரர். அதற்கு ஏற்றபடி அவர் ஆட வேண்டும். கொஞ்சம் பாசிட்டிவாக அவர் ஆட வேண்டும். ஆப்கானிஸ்தான் பவுலிங் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதற்காக அவ்வளவு மெதுவாக ஆட கூடாது.

மிக மோசம்

மிக மோசம்

தோனி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாசிட்டிவாக ஆடவில்லை. தோனி நன்றாக அடித்து ஆட கூடியவர். ஆனால் அவரின் ஸ்டிரைக் சென்ற முறை சரியாக இல்லை. அவர் நிறைய பந்துகளை பிடித்து குடித்துவிட்டார். அது கடைசி நேரத்தில் பெரிய அழுத்தத்தை கொடுத்துவிட்டது. இதனால் ஸ்கோர் குறைந்துவிட்டது.

சர்ச்சை

சர்ச்சை

இதனால் இனி வரும் போட்டிகளில் தோனி சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கிறேன் என்று சச்சின் குறிப்பிட்டு இருந்தார். சச்சினின் இந்த பேட்டி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சச்சின் ரசிகர்கள் பலர் அவரின் பேட்டிக்கு ஆதரவு அளித்து இருக்கிறார்கள். அதேபோல் கம்பீர், கங்குலி ரசிகர்களும் தோனிக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பதிலடி

பதிலடி

அதே சமயம் சச்சினும் உலகக் கோப்பை போட்டியில் எல்லாம் பெரியதாக ஆடியதில்லை. ஆனால் தோனி மூன்று ஐசிசி கோப்பைகளை உலகில் வென்றே ஒரே கேப்டன். போன போட்டியில் கோலி தவிர எல்லா வீரர்களும் மோசமாக ஆடினார்கள். ரோஹித் எல்லாம் ஒரு ரன்னுக்கு அவுட்டானார். அப்படி இருக்கும் போது தோனியை மட்டும் குறை சொல்வது ஏன் என்று தோனி ரசிகர்கள் எல்லாம் கேள்வி எழுப்பி கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

Story first published: Monday, June 24, 2019, 15:34 [IST]
Other articles published on Jun 24, 2019
English summary
ICC World Cup 2019: Fight between fans after Sachin comments Dhoni's batting yesterday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+