Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோல்விக்கு பின் சண்டை போட்ட வீரர்கள்.. தற்கொலை செய்ய யோசித்த பாக். கோச்.. அன்று இரவு நடந்தது என்ன?

Recommended Video

WORLD CUP 2019 | வீரர்கள் சண்டை ! தற்கொலைக்கு யோசித்த மைக் ! நடந்தது என்ன? - வீடியோ

லண்டன்: தொடர் தோல்விகளை அடுத்து பாகிஸ்தான் அணிக்குள் நடக்கும் பிரச்சனைகள் தற்போது வெளிப்படையாக தெரிய தொடங்கி இருக்கிறது. முக்கியமாக அணியின் பயிற்சியாளருக்கும் வீரர்களுக்கு இடையில் நிலவி வரும் சண்டை அப்படியே பட்டவர்த்தனமாக வெளியே தெரிய தொடங்கி உள்ளது.

பாகிஸ்தான் அணியில் எப்போதும் பயிற்சியாளர் மற்றும் வீரர்களுக்கு இடையில் சண்டை நடப்பது வழக்கம். 2004ம் ஆண்டில் இருந்தே பாகிஸ்தான் அணி எப்போது தொடர் தோல்விகளை சந்தித்தாலும் அந்நாட்டு பயிற்சியாளர் சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.

ஆம், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருப்பது என்பது நெருப்பில் நடப்பது போன்ற காரியம். எப்போது வீரர்களின், ரசிகர்களின், அணி நிர்வாகத்தின் எதிர்ப்பை சந்திக்க வேண்டும் என்று தெரியாது. அப்படித்தான் தற்போது மீண்டும் அந்த அணிக்குள் பிரச்சனை உருவாகி இருக்கிறது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உலகக் கோப்பை தேர்வே வித்தியாசமானது. இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற அணிகளில், விளையாடும் வீரர்கள் மற்றும் மாற்று வீரர்களை அணி தேர்வுக்குழு, பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகியோர் சேர்ந்துதான் தேர்வு செய்வார்கள். இதனால் இந்த வீரர்கள்தான் தேவை, இவர்கள் தேவையில்லை என்பதில் அந்த அணி தெளிவாக இருக்கும். ஆனால் பாகிஸ்தானில் நிலை அப்படி கிடையாது.

தேர்வு எப்படி

தேர்வு எப்படி

பாகிஸ்தானில் தேர்வுக்குழுவிற்குத்தான் அதிக சக்தி இருக்கிறது. அதன் தலைவராக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் இருக்கிறார். இவர்கள் தேர்வு செய்யும் 20 வீரர்கள் லண்டன் செல்வார்கள். பின் அவர்களில் இருந்து 11 பேரை பாகிஸ்தான் கோச் தேர்வு செய்து விளையாட வைக்கலாம். ஆனால் இந்த 20 வீரர்களை தேர்வு செய்யும் உரிமை பாகிஸ்தான் பயிற்சியாளர் மற்றும் கேப்டனுக்கு கிடையாது.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

இதனால் லண்டன் செல்லும் அணியில் சில முக்கிய வீரர்கள் விடுபடும் நிலை ஏற்படலாம். பயிற்சியாளர், கேப்டனுக்கு ஒத்துழைக்காத வீரர்கள் அணிக்குள் வரலாம். இதுதான் தற்போது பாகிஸ்தான் அணிக்குள் நடந்து வருகிறது. பாகிஸ்தான் அணிக்குள் மூன்று தீவுகளாக வீரர்கள் பிரிந்து இருக்கிறார்கள். பயிற்சியாளருக்கு ஆதரவான வீரர்கள், பயிற்சியாளரை எதிர்க்கும் வீரர்கள், இவர்கள் எல்லோரிடமும் பேசி பாலம் போல செயல்படும் வீரர்கள்.

தோல்வி

தோல்வி

இதுதான் பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விக்கு காரணம் என்று கூட கூறலாம். ஆம், பாகிஸ்தான் வீரர்கள் பலர் தங்களுக்கு உள்ளேயே பேசிக்கொள்வது இல்லை. அதுதான் களத்தில் ஈகோ பிரச்சனையாக வெடிக்கிறது. இதனால் போட்டியில் வீரர்கள் சரியாக செயல்பட முடியவில்லை. அணியின் தோல்விக்கு காரணமாக அது முடிந்துவிடுகிறது.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

இந்த தொடர் பிரச்சனையால் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் அந்நாட்டு கோச் மைக்கி ஆர்தருக்கு எதிராக தேர்வு வாரியத்திடமும் புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்திய அணிக்கு எதிரான தோல்வியை தொடர்ந்து பாகிஸ்தான் கோச் மைக்கி தற்கொலை செய்ய முயன்றதாக பேட்டியில் கூறியதும் அரங்கேறியது.

ஆம் தற்கொலை

ஆம் தற்கொலை

ஆம் நான் தற்கொலை செய்ய யோசித்தேன் என்று மைக்கி வெளிப்படையாக கூறி உள்ளார். இந்தியா பாகிஸ்தான் அணிக்கு இடையிலான போட்டிக்கு பின் உடை மாற்றும் அறையில் தோல்வி தொடர்பாக வீரர்களை இடையே வாக்கு வாதம் நடந்து இருக்கிறது. இதன் பின்பே இன்சமாம் உல் ஹக் பாகிஸ்தான் கிளம்பி சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்பின்பே அந்த பிரச்சனை கொஞ்சம் சரியானது.

சரியாகும்

சரியாகும்

2007 உலகக் கோப்பை தோல்விக்கு பின் பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் ஊல்மர் மரணம் அடைந்தார். அது தற்கொலை என்று இப்போதும் சர்ச்சை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணி இப்போதுதான் கொஞ்ச வெற்றிப் பாதைக்கு திரும்பி உள்ளது. இம்ரான் தொடங்கி அக்தர் வரை பல ஜாம்பவான்களை பார்த்த அணிதான் பாகிஸ்தான். தற்போது இருக்கும் சூழ்நிலையை அந்த அணி கடந்த வர வேண்டும். இது பாகிஸ்தான் ரசிகர்களின் விருப்பம் மட்டுமல்ல எல்லா கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமும் அதுதான்!

Story first published: Tuesday, June 25, 2019, 10:56 [IST]
Other articles published on Jun 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+