Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போதும் இந்த சண்டை.. கப்பல் ஏறும் இந்திய அணியின் மானம்.. பிசிசிஐ இனியாவது நடவடிக்கை எடுக்குமா?

Recommended Video

WORLD CUP 2019 | கப்பல் ஏறும் இந்திய அணியின் மானம்.. பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா?- வீடியோ

லண்டன்: வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சிரேக்கர் மற்றும் இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு இடையில் நடக்கும் சண்டை பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணிக்குள் தற்போது நிறைய பிரச்சனைகள் நடந்து வருவது போல இந்திய அணிக்கு வெளியேயும் நிறைய பிரச்சனைகள் நடந்து வருகிறது. அதில் முதன்மையானது சஞ்சய் மஞ்சிரேக்கர் செய்யும் வர்ணனை.

இந்திய வீரர்கள் தொடங்கி உலகம் முழுக்க பல கிரிக்கெட் வீரர்கள், பல கோடி கிரிக்கெட் ரசிகர்கள், திரைபிரபலங்கள் இவரின் வன்மமான வர்ணனையை கேட்டு கோபம் அடைந்து இருக்கிறார்கள். இவருக்கு உடனே தடை விதிக்க வேண்டும் என்று கூட பிசிசிஐ அமைப்பிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

என்ன வன்மம்

என்ன வன்மம்

மும்பை சேர்ந்த சஞ்சய் மஞ்சிரேக்கர் திமிருடன் பேசி பேசியே பிரபலமாகி இருக்கிறார். சொற்ப போட்டிகளில் விளையாடி, சொற்ப ரன்களை எடுத்திருக்கும் சஞ்சய் மஞ்சிரேக்கர் முன்னணி வீரர்களை மிக வன்மமாக வர்ணனை செய்வார். முக்கியமாக சென்னை சூப்பர் கிங் அணி வீரர்கள் என்றால் இவருக்கு எங்கிருந்துதான் வெறி வருமோ தெரியாது.

தோனிக்கு எதிரி

தோனிக்கு எதிரி

இவர் ரோஹித் சர்மாவிற்கு எப்போதும் ஆதரவாக பேசி கோலி, தோனியை மட்டம் தட்டுவார். முக்கியமாக தோனியை இவர் மோசமாக பேசி பல முறை சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார். இந்த நிலையில் இவர் கடந்த இந்தியா வங்கதேசம் போட்டியின் போது இந்திய வீரர் ஜடேஜாவை ''உதிரி விக்கெட்டுகள், ரன்களை எடுக்கும் வீரர்'' என்று கிண்டலாக அவமானப்படுத்தினார்.

பதில் அளித்தார்

பதில் அளித்தார்

இதற்கு பதில் அளித்த ஜடேஜா நான் என் வாழ்க்கையில் உங்களை விட அதிக போட்டிகளை விளையாடி இருக்கிறேன் சார். இப்போதும் கூட விளையாடி வருகிறேன். சில விஷயங்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாயில் இருந்து வயிற்றுப்போக்கு வருவது போல பேசுகிறீர்கள்.. போதும், என்று கோபமாக குறிப்பிட்டு இருந்தார்.

மீண்டும் பதில்

மீண்டும் பதில்

தற்போது இதற்கு சஞ்சய் மஞ்சிரேக்கர் மீண்டும் பதில் அளித்துள்ளார். அதில் உங்களுக்கு நான் பேசுவதால் கோபம் வருகிறது என்றால் அது என்னுடைய பிரச்சனை கிடையாது. அது உங்களுடைய பிரச்சனை. நான் பேசுவதில் எந்த தவறும் கிடையாது. நீங்கள் சரியாக ஆடி இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்து இருக்கும் என்று குறிப்பிட்டார். ஆனால் கடைசியில் இருவரும் தங்கள் டிவிட்டை டெலிட் செய்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 4, 2019, 15:22 [IST]
Other articles published on Jul 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+