தாங்க முடியவில்லை.. 8 வயது சிறுவன் போல குலுங்கி குலுங்கி அழுதேன்.. கண்ணீர் வர வைத்த இந்திய பவுலர்!
Recommended Video
லண்டன்: இந்திய அணியின் தோல்வியை தாங்க முடியாமல் குலுங்கி குலுங்கி அழுததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஒருவர் டிவிட் செய்துள்ளார்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று செமி பைனல் போட்டி நடந்தது. இந்த தொடர் முழுக்க இந்திய அணிதான் உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்தியது.
யாராலும் வெல்ல முடியாத அணியாக இந்திய அணி திகழ்ந்தது. ஆனால் முக்கியமான நேரத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய காரணத்தால் நேற்று இந்தியா தோல்வி அடைந்தது.

என்ன தோல்வி
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் செமி பைனல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்த தோல்வி காரணமாக இந்தியா உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. கடைசி வரை போராடிய இந்திய அணி மிக மெல்லிய இடைவெளியில் தோல்வியை தழுவியது.

அதிர்ச்சி
மிகவும் பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. ஒவ்வொரு இந்திய ரசிகனின் கனவும் இதனால் நேற்று தகர்ந்தது. நியூசிலாந்து மிகவும் சிறப்பாக ஆடி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. இந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

மோசம்
ரசிகர்கள் எப்படி அதிர்ச்சிக்கு உள்ளானார்களோ அதேபோல்தான் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் இந்த தோல்வியால் கலங்கிப் போய் இருக்கிறார்கள். இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் பவுலர் ஷாகிர் கான் டிவிட் செய்துள்ளார். அதில், நான் ஒரு வளர்ந்த நபர் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். அதனால் நான் உணர்ச்சிவசப்பட மாட்டேன் என்றுதான் நினைத்தேன்.

இல்லை
ஆனால் என் நம்பிக்கை தகர்ந்தது. நான் 8 வயது சிறுவன் போல குலுங்கி குலுங்கி அழுதேன். 1996 உலகக் கோப்பையில் அழுதது போலவே அழுதேன். கிரிக்கெட் நமக்குள் இருக்கும் குழந்தையை இன்னும் உயிருடன்தான் வைத்துள்ளது. தோனி, கோலி மற்றும் இந்திய அணிக்கு சிறப்பான உலகக் கோப்பையை கொடுத்ததற்காக வாழ்த்துகள், என்றுள்ளார்.


Click it and Unblock the Notifications