Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடும் கோபத்தில் தமீமை நோக்கி பந்தை வீசிய லுங்கி.. மைதானத்தில் திக்.. அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

Recommended Video

World cup 2019: SA vs BAN | Ngidi Vs Tamim | கோபத்தில் தமீமை நோக்கி பந்தை வீசிய லுங்கி- வீடியோ

லண்டன்: நேற்று வங்கதேசத்திற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையில் நடந்த போட்டியில் இரண்டு வீரர்கள் சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது. வங்கதேச வீரர் தமீம் இக்பால் மற்றும் தென்னாபிரிக்க வீரர் லுங்கி நிகிடி இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது.

நேற்று வங்கதேசத்திற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. தென்னாபிரிக்கா அணியே இந்த போட்டியில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வங்கதேச அணி எல்லோருக்கு அதிர்ச்சி கொடுத்தது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் களமிறங்கிய வங்கதேசம் அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடியது. வங்கதேசம் வீரர்களின் விக்கெட்டுகளை எடுக்க தென்னாபிரிக்கா பவுலர்கள் பெரிதும் திணறினார்கள்.

என்ன அடித்தது

என்ன அடித்தது

நேற்று முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடியது. வங்கதேச வீரர்கள் சவுமியா சர்கார் 42 ரன்கள் எடுத்தார். ஷாகிப் அல் ஹசன் 75 ரன்கள் எடுத்தார். முஷ்பிகிர் ரஹீம் 78 ரன்கள் எடுத்தார். மஹ்மதுல்லா 46 ரன்கள் எடுத்தார்.

சூப்பர்

சூப்பர்

இவர்களின் விக்கெட்டை வீழ்த்த வங்கதேச வீரர்கள் பெரிதும் கஷ்டப்பட்டார்கள். முக்கியமாக களமிறங்கிய வங்கதேச வீரர்கள் எல்லோரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து போட்டியிட்டார்கள். மொத்தமாக 50 ஓவர் முடிவில் இதனால் வங்கதேசம் அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 330 ரன்களை எடுத்தது.

மோசமான தோல்வி

மோசமான தோல்வி

இதன் பின் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. முக்கியமான வீரர்கள் எல்லோரும் நல்ல ரன்கள் எடுத்தாலும், யாரும் செஞ்சுரி போடும் அளவிற்கு களத்தில் நிற்கவில்லை. டு பிளசிஸ் 62 ரன்கள் எடுத்தார். டுமினி, மார்க்கரம் 45 ரன்கள் எடுத்தனர். ஆனாலும் கூட தென்னாபிரிக்கா அணியால் 50 ஓவரில் 303 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த நிலையில்தான் வங்கதேசத்திற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையில் நடந்த போட்டியில் இரண்டு வீரர்கள் சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது. வங்கதேச வீரர் தமீம் இக்பால் மற்றும் தென்னாபிரிக்க வீரர் லுங்கி நிகிடி இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. 6 வது ஓவரின் 4 வது பந்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

அந்த பந்தில் தென்னாபிரிக்க வீரர் லுங்கி நிகிடி பந்தை போட்டுவிட்டு, பின் பந்து கையில் கிடைத்ததும் அதை வங்கதேச வீரர் தமீம் இக்பாலை நோக்கி வீசி எறிந்தார். மிகவும் கோபத்தில் அவர் வங்கதேச வீரர் தமீம் இக்பாலை நோக்கி பந்தை வீசி எறிந்தார். அவர் இதை பேட்டால் தடுத்தார். ஆனால் இதற்கான காரணம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.

மிக மோசம்

இதனால் வங்கதேசம் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமீம் அப்போது கிரீசை விட்டு வெளியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் லுங்கி ஏன் இப்படி மோசமாக நடந்து கொண்டார் என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் தமீம் அவரிடம் சண்டைக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர்

சூப்பர்

ஆனால் அதற்கு அடுத்த பந்தே தமீம் பதிலடி கொடுத்தார். கடும் கோபத்தில் இருந்த அவர் லுங்கி பந்தில் பவுண்டரி அடித்து பதிலடி கொடுத்தார். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது.

Story first published: Monday, June 3, 2019, 10:42 [IST]
Other articles published on Jun 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+