ஒரு வார்த்தை பேசவில்லை.. ஸ்டன் ஆகி நின்ற கங்குலி.. கடைசி நேரத்தில் நடந்த ஷாக் சம்பவம் - வீடியோ!
Recommended Video
லண்டன்: நேற்று இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்த செமி பைனல் போட்டியில் கங்குலி செய்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் டிரெண்டாகி இருக்கிறது. பலர் கங்குலியின் வீடியோவை ஷேர் செய்து வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று உலகக் கோப்பை செமி பைனல் போட்டி நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.
கடைசி நேரத்தில் இந்திய அணிக்கு ஜடேஜாவும், தோனியும் பெரிய அளவில் நம்பிக்கை அளித்தார்கள். ஆனால் அவர்களும் அவுட்டான பின் இந்தியாவின் தோல்வி உறுதியானது.

சூப்பர்
இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிதான் வர்ணனை செய்து கொண்டு இருந்தார். இந்த போட்டி முழுக்க கங்குலியின் வர்ணனை பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. இந்திய அணிக்கு வழி காட்டும் விதமாக வர்ணனையில் கங்குலி நிறைய அறிவுரைகளை வழங்கி வந்தார்.

என்ன சொன்னார்
நேற்று தோனி 7வது வீரராகத்தான் களமிறங்கினார். இந்த விஷயம் வர்ணனை செய்து கொண்டு இருந்த கங்குலியை கோபம் அடைய வைத்தது. இது தொடர்பாக பேசிய அவர், இந்திய அணி மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இன்னும் ஏன் தோனி வெளியே வரவில்லை. இதுதான் அவர் வெளியே வருவதற்கான சரியான நேரம். ஆனால் ஏன் இன்னும் அவர் களமிறங்கவில்லை. இதை ஏற்க முடியாது என்று கூறினார்.

அதன்பின் என்ன
அதன்பின் தோனியின் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து கங்குலி பாராட்டி வந்தார். இந்த போட்டி முழுக்க கங்குலியின் வர்ணனை கேட்க மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் கடைசி ஓவரில் கங்குலி எதுவுமே பேசவில்லை. இந்தியாவின் தோல்வி உறுதியான பின் அப்படியே அமைதியாகி ஸ்டன் ஆகி நின்றார்.
அட கடவுளே
அதுவரை பேசிக்கொண்டு இருந்தவர் 9 விக்கெட் விழுந்த பின் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியானார். அவர் முகம் முழுக்க அதிர்ச்சி மட்டுமே இருந்தது. பேசுவதற்கு வாய் வராமல், வார்த்தை இல்லாமல் அவர் திணறிக் கொண்டு இருந்தார்.


Click it and Unblock the Notifications