ஒரு கையில்.. விழுந்து புரண்டு சாகசம்.. கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் சிறந்த கேட்ச்.. வைரல் வீடியோ!
Recommended Video
லண்டன்: கிரிக்கெட் உலகில் சிறந்த கஷ்டமான சிக்ஸ் இதுதான் என்றொரு வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
நேற்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்கியது. முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக நடந்தது. இதில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பிடித்த கேட்ச் பிரபலமாகி உள்ளது.
இங்கிலாந்து வீரர் 34.1வது ஓவரில் அடில் ரஷீத் களமிறங்கி பவுலிங் போட்டார். அந்த ஓவரில் தென்னாபிரிக்கா வீரர் ஆண்டில் பெலுக் வாயோ ரஷீத் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தார்.
வைரல்
ஆனால் பந்து ஸ்விங் ஆனதில் அவரால் சிக்ஸ் அடிக்க முடியவில்லை. அப்போது எகிறி குதித்து வந்த ஸ்டோக்ஸ், பவுண்டரில் லைனுக்கு அருகே பந்தை ஒற்றைக் கையில் பிடித்தார். ஒற்றைக் கையில் பிடித்தது மட்டுமில்லாமல், டைவ் அடித்து, உருண்டு விழுந்தார்.

பெரிய வைரல்
இந்த வீடியோ பெரிய வைரலாகி உள்ளது. இதுதான் கிரிக்கெட் உலகில் சிறப்பான கேட்ச் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம் சிலர் இது சிறந்த கேட்ச் கிடையாது என்று கூறி அதை மறுத்தும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் போட்டி கேட்ச்
இந்த நிலையில் தற்போது கிரிக்கெட் போட்டிகளிலேயே மிக மிக சிறப்பான ககேட்ச் இதுதான் என்றொரு வேறு ஒரு பழைய வீடியோ வைரலாகி வருகிறது. இனி எத்தனை கேட்சுகள் பிடிக்கப்பட்டாலும், எவ்வளவு சிறப்பாக டைவ் அடித்து பிடித்தாலும் அதெல்லாம் பெரிய்ய கேட்ச் கிடையாது. இதுதான் சிறப்பான கேட்ச் என்று கூறுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் நடந்தது
அதன்படி இந்த கேட்ச் ஆஸ்திரேலியாவில் 1993ல் டிசம்பர் மாதம் பால் ஃபேட்டி வாட்டின் என்பவரால் எடுக்கபட்ட கேட்ச் ஆகும். ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் டெஸ்டிமோனியல் போட்டியில் பிடிக்கப்பட்ட கேட்ச் ஆகும் இது. இதுதான் கிரிக்கெட் உலகில் எடுக்கப்பட்ட மிக சிறந்த கேட்ச் என்கிறார்கள்.
எத்தனை ஆஸ்திரேலியாவில்
40 மீட்டர்கள் ஓடி வந்த சரியாக பந்தை வெறும் ஒற்றை கையில் வாட்டின் பிடிக்கிறார். அதன்பின் அந்த வாட்டின் வாட்டின் கீழே விழுந்து உடனே எழுந்து ஓடுகிறார். வாட்டின் எடுத்த இந்த கேட்ச் போல மிக சிரமமான கேட்சை வேறு யாரும் எடுக்கவில்லை என்று இணையத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

வாட்டின் கேட்ச்
வாட்டின் அதன்பின் கிரிக்கெட் உலகில் இருந்து ரக்பி உலகிற்கு சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை நடந்து வரும் இந்த் வேளையில் இந்த பழைய வீடியோ தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications