இன்னும் 2 போட்டிதான்.. செமி பைனலுக்கு முன் ஸ்பெஷல் பயிற்சியில் தோனி.. பின்னணியில் முக்கிய காரணம்!
லண்டன்: இந்திய அணி நாளை செமி பைனல் போட்டியில் விளையாட இருக்கும் நிலையில் இன்று தோனி மிக தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்.
எல்லோரும் எதிர்பார்த்த, கிரிக்கெட் ரசிகர்கள் 4 வருடமாக எப்போது வரும் என்று காத்துக் கொண்டு இருந்த அந்த நாள் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. ஆம் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது.
நாளை செமி பைனல் போட்டிகள் தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் முதல் செமி பைனல் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன பயிற்சி
இந்த நிலையில் இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள். இந்திய அணியின் மூத்த வீரர் தோனி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். நேற்றும் இன்றும் அவருக்கு தனியாக ஸ்பெஷல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கூடுதல் நேரம்
மற்ற வீரர்களை விட தோனி கூடுதல் நேரம் பயிற்சி செய்து வருகிறார். கீப்பிங் பயிற்சியை விட பேட்டிங் பயிற்சி யை அவர் அதிக நேரம் எடுத்து வருகிறார். நேற்று முழுக்க இவர் இந்திய ஸ்பின் பவுலர்களை வைத்து வலை பயிற்சியில் ஈடுப்பட்டார். எப்போது ஸ்பீட் பவுலிங்கில் வலை பயிற்சி மேற்கொள்ளும் தோனி ஸ்பின் பவுலிங்கில் நேற்று பயிற்சி மேற்கொண்டார்.

காரணம் இருக்கிறது
சமீப காலமாக இந்திய அணியின் மூத்த வீரர் தோனி சரியாக ஸ்பின் பவுலிங்கில் விளையாடுவது இல்லை. முக்கியமாக ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்பின் பவுலர்கள் போட்ட பந்தில் அவர் மோசமாக திணறினார். இந்த உலகக் கோப்பை தொடர் முழுக்கவே ஸ்பின் பவுலிங்கில் தோனி சரியாக விளையாடவில்லை. இதனால் அவர் மீது நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

அதனால் பயிற்சி
இதையடுத்துதான் தற்போது தோனி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதனால்தான் இரண்டு நாட்களாக ஸ்பின் பவுலிங்கை வைத்து தோனி ஸ்பெஷல் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த உலகக் கோப்பை தொடர்தான் தோனிக்கு கடைசி தொடர் என்பதால் அவர் நல்ல ஸ்கோர் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications