For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செம.. இங்கிலாந்து போட்டிக்கு முன் இந்திய அணிக்கு சூப்பர் செய்தி.. இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது!

இங்கிலாந்து இந்தியா அணிகள் இன்று உலகக்கோப்பை போட்டியில் லீக் ஆட்டத்தில் மோதிக்கொள்கிறது.

லண்டன்: இங்கிலாந்திற்கு எதிரான போட்டிக்கு முன் இந்திய அணிக்கு மிக முக்கியமான நல்ல செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

இங்கிலாந்து இந்தியா அணிகள் இன்று உலகக்கோப்பை போட்டியில் லீக் ஆட்டத்தில் மோதிக்கொள்கிறது. இந்த தொடரிலேயே மிக முக்கியமான போட்டியாக இது பார்க்கப்படுகிறது.

இன்று எந்த அணி வெற்றிபெறுகிறதோ, அந்த அணியே உலகக் கோப்பையை வெல்ல போகிறது
என்று கூறுகிறார்கள். அதனால் இன்று நடக்கும் போட்டியை காண உலகமே காத்து இருக்கிறது.

சிறப்பு

சிறப்பு

இங்கிலாந்து அணிக்கு மிக சிறப்பான பேட்டிங் ஆர்டர் இருக்கிறது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் வேறு காயம் காரணம் சென்றுவிட்டு மீண்டும் அணிக்குள் வந்து இருக்கிறார். அதே போல் பவுலிங் ஆரடரும் அந்த அணிக்கு சிறப்பாகவே இருக்கிறது.

 எப்படி வீசுகிறார்

எப்படி வீசுகிறார்

முக்கியமாக இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் மிகவும் சிறப்பாக பந்து வீசுகிறார் என்றுதான் கூற வேண்டும். அவர்தான் இந்த உலகக் கோப்பை தொடரில் கிரிக்கெட் உலகிற்கு கிடைத்த முத்து என்று கூட கூறலாம். ஆம் இதுவரை விளையாடிய போட்டிகளில் 5 முறை 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மொத்தம் இவர் 16 விக்கெட் எடுத்துள்ளார்.

 ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இவர் தற்போது காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இவருக்கு காலில் தசைப்பிடிப்பும், சிறிய காயமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் இவர் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார். இன்று காலை அவரை மருத்துவர்கள் சோதனை செய்ய இருக்கிறார்கள். அதன்பின்பே அவர் இன்று விளையாடுவாரா என்பது தெரிய வரும்.

 நல்லது

நல்லது

இவர் நேற்று வலைப்பயிற்சி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் சிறந்த பவுலர்களில் ஒருவரான ஆர்ச்சர் இன்று விளையாடாமல் போனால் அது இந்திய அணிக்கு மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும். இந்த நல்ல வாய்ப்பை இந்திய பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புவோம்.

Story first published: Sunday, June 30, 2019, 7:40 [IST]
Other articles published on Jun 30, 2019
English summary
ICC World Cup 2019: Hope, India gets super good news ahead of England clash today.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+