Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குல்தீப், பாண்டியா போட்ட 4 பந்துகள்.. மொத்தமாக ஒடுங்கிய பாக்.. வெற்றிக்கு காரணமான திக் திக் நொடிகள்

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | சுத்தி சுத்தி அடித்த இந்தியா, பாகிஸ்தான் படுதோல்வி!

லண்டன்: நேற்று பாகிஸ்தான் இந்தியா இடையிலான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு நான்கு முக்கியமான பந்துகள் காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி மீண்டும் வரலாற்று சாதனை ஒன்றை படைத்து இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியாக 7வது வெற்றியை உலகக் கோப்பையில் இந்திய அணி பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. நேற்று நடந்த இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பின் இரண்டு முக்கியமான பவுலர்கள் இருக்கிறார்கள்.

இரண்டு பேர்

இரண்டு பேர்

நேற்று பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் கொஞ்சம் திணறினாலும் போக போக சுதாரித்து ஆட தொடங்கியது. பாகிஸ்தான் வீரர்கள் பொறுப்பை உணர்ந்து பொறுமையாக ஆடி வந்தனர். இதனால் போட்டி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் பக்கம் திரும்பிக் கொண்டு இருந்தது. அப்போதுதான் குல்தீப் யாதவும், பாண்டியாவும் போட்டியை இந்தியா பக்கம் திருப்பினார்கள்.

ஆட்டம் முக்கியம்

ஆட்டம் முக்கியம்

23.6 வது ஓவரில் குல்தீப் சுழலில் பாபர் ஆஸம் அவுட்டானார். அப்போது அவர் 48 ரன்கள் எடுத்து இருந்தார். பந்து குத்திய வேகத்தில் மிக நன்றாக ஸ்விங் ஆனது. பின் பேட்டில் இன்சைட் எட்ஜ் ஆவது போல சென்று ஸ்டம்பை சாய்த்தது. இவர்தான் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை கொடுத்துக் கொண்டு இருந்தார். இந்த ஓவர்தான் மிக முக்கியமான திருப்பு முனையாக இருந்தது.

நம்பிக்கை வந்தது

நம்பிக்கை வந்தது

இவரின் விக்கெட் விழுந்ததும் பாகிஸ்தான் அணி கண்டிப்பாக வரிசையாக விக்கெட்டுகளை இழக்கும் என்பது உறுதியானது. அதேபோல்தான் 25.2 ஓவர் போட்ட குல்தீப் மீண்டும் பாகிஸ்தான் கோட்டையை சரித்தார். அந்த ஓவரில் இன்னொரு முக்கியமான வீரரான பாஹர் ஸமன் அவுட்டானார். சாஹலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதிரடியாக 62 ரன் எடுத்த அவரின் விக்கெட் பாகிஸ்தான் அணியை குழைத்தது. இவர்கள் இருவரும் அவுட்டான பின் போட்டி மீண்டும் இந்திய அணி பக்கம் வந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்தியாவின் அதிரடி அதோடு நிற்கவில்லை.6.5வது ஓவரில் பாண்டியா ஹபீஸ் விக்கெட்டை எடுத்தார். ஸ்கோயர் லெக் திசையில் பவுண்டரி அடிக்க முயன்ற ஹபீஸ் பின் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் வெறும் 9 ரன்கள் மட்டும் எடுத்து இருந்தார். அதே ஓவரில் அடுத்த பந்தில் ஹர்திக் பாண்டியா, சோயப் மாலிக் விக்கெட்டை எடுத்தார். களமிறங்கிய உடன் ஹர்திக் பாண்டியா அவரை போல்ட் செய்தார்.

நான்கு பந்துகள்

நான்கு பந்துகள்

இந்த நான்கு பந்துகள்தான் போட்டியை மொத்தமாக இந்தியா பக்கம் கொண்டு வந்தது. புவனேஷ்வர்குமார் இல்லாமல் கூட இந்திய அணி இப்படித்தான் வெற்றியை தங்கள் பக்கம் நகர்த்தியது. மிகவும் இக்கட்டான நிலையில் இவர்கள் போட்ட அசாதாரண பந்து வீச்சே வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

Story first published: Monday, June 17, 2019, 13:19 [IST]
Other articles published on Jun 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+