For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4 இளம் வீரர்கள்தான் பாக். கதை முடிக்க போகிறார்கள்.. குட்டி பசங்களை வைத்து இந்தியா கலக்கல் திட்டம்!

இந்திய அணியில் நான்கு வீரர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் உள்ள இளமையான நான்கு வீரர்கள் போட்டியின் போக்கை மாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இந்தியா பாகிஸ்தான் இடையில் இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. மழையால் இந்த ஆட்டம் தடைபட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.

இருந்தாலும் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு கொஞ்சமும் குறையாமல் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முக்கியமாக இன்று நடக்கும் போட்டியில் இந்தியா எப்படி வெல்ல போகிறது என்பதும் சஸ்பென்சாக இருக்கிறது.

நான்கு வீரர்கள்

நான்கு வீரர்கள்

இந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியை சேர்ந்த நான்கு வீரர்கள் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த போகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்திய அணியில் இருக்கும் இளம் படையை கோலி பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஆட்டத்தின் போக்கை இவர்கள்தான் மாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது .

முதல் வீரர்

முதல் வீரர்

அதன்படி இந்திய அணியில் இருக்கும் பும்ரா பாகிஸ்தான் பேட்டிங் ஆர்டரை தொடக்கத்திலேயே காலி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் பாபர் அசாம் மற்றும் சர்ப்ராஸ் கான் ஆகியோர்தான் மிகவும் வலுவான வீரர்கள். இவர்களின் விக்கெட்டை பும்ரா தொடக்கத்திலேயே எடுப்பார் என்கிறார்கள்.

விஜய் சங்கர்

விஜய் சங்கர்

இன்று நடக்கும் போட்டியில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. 4 வது இடத்தில் களமிறங்கும் இவர் பெரும்பாலும் பவுலிங்கும் செய்வார். இதனால் பவுலிங் பேட்டிங் இரண்டிலும் பாகிஸ்தான் அணிக்கு இவர் டஃப் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய அணியில் மிடில் ஆர்டரில் இவர் நிரந்தமாக இடம்பெற இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.

ஜடேஜா வருகிறார்

ஜடேஜா வருகிறார்

அதேபோல் ஸ்பின் பவுலர் குல்தீப் யாதவின் இடத்தை ஜடேஜா நிரப்ப இருக்கிறார். இன்று அவர் கேதார் ஜாதவிற்கு பதிலாக களமிறங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணிக்கு புதிய ஆல் ரவுண்டர் கிடைப்பார். இதனால் விஜய் சங்கர், பாண்டியாவுடன் சேர்த்து இந்திய அணியில் மூன்று ஆல் ரவுண்டர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யார்

யார்

முக்கியமாக குல்தீப் யாதவ் நீக்கத்தால் இன்று முகமது ஷமி களமிறங்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். ஆகவே இந்திய அணியின் வேகப்பந்து ஆர்டருக்கு ஷமி பெரிய தூணாக இருப்பார். அணியில் இருக்கும் இந்த 4 வீரர்களை வைத்துதான், கோலி பாகிஸ்தான் கதையை முடிக்க போகிறார் என்று கூறுகிறார்கள்.

Story first published: Sunday, June 16, 2019, 12:15 [IST]
Other articles published on Jun 16, 2019
English summary
ICC World Cup 2019: How 4 players may help team India to win the match against Pakistan.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+