Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு இடி.. ஒரே ஒரு கேரம் பால்.. ரோஹித் கதையை கட்சிதமாக முடித்த முஜீப்.. எப்படி நடந்தது?

லண்டன்: இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, வெறும் ஒரு ரன்னுக்கு அவுட்டாகி அதிர்ச்சி அளித்து இருக்கிறார்.

உலகக் கோப்பை தொடரின் மிக முக்கியமான கட்டத்தில் இன்று இந்தியா தனது 5 வது லீக் ஆட்டத்தை ஆடுகிறது. இந்த லீக் ஆட்டத்தில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் பவுலிங் நன்றாக இருப்பதால் இந்திய அணி நிதானமாக ஆடி வருகிறது .

டாஸ்

டாஸ்

இதில் இந்திய கேப்டன் கோலி டாஸ் வென்றார். டாஸ் வென்ற கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்ய முடிவு செய்தார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்து, அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற கோலி திட்டமிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன அதிர்ச்சி

என்ன அதிர்ச்சி

இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டு இருக்கிறது. புவனேஷ்வர்குமாருக்கு பதில் தற்போது முகமது ஷமி களமிறங்கி உள்ளார். இந்த நிலையில் போட்டியின் தொடக்கத்தில் இருந்து இந்திய அணி மிகவும் நிதானமாக ஆடி வருகிறது.

ரோஹித் அவுட்

ரோஹித் அவுட்

போட்டியின் தொடக்கத்தில் மிகவும் பொறுமையாக பந்துகளை குடித்துக் கொண்டு இருந்தார் ரோஹித் சர்மா. 10 பந்துகளை பிடித்த அவர் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்தார். அதன்பின் எல்லோரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் முஜீப் உர் ரஹ்மான் ஓவரில் அவுட்டானார்.

அவுட்

அவுட்

முஜீப் உர் ரஹ்மான் ரோஹித் களத்திற்கு வந்ததும் சரியாக கேரம் பால் போட்டார். அஸ்வின் ஸ்டைலில் பந்தை இறக்கிய முஜீப் உர் ரஹ்மான் ரோஹித்தை நிலை குலைய வைத்தார். நேராக வந்த பந்து, மிக மிக தாமதம் ஆப் ஸ்டம்ப் பக்கம் திரும்பியது. இந்த லேட் ஸ்பின்னை கொஞ்சம் கூட ரோஹித் எதிர்பார்க்கவில்லை.அவர் சுதாரிக்கும் முன் பந்து திரும்பி ஆப் ஸ்டம்பில்பட்டது.

விக்கெட் விழுந்தது

விக்கெட் விழுந்தது

இதனால் ரோஹித் இன்று 200 ரன்கள் அடிக்கும் கனவும் களைந்து போனது. இந்த விக்கெட் காரணமாக தற்போது இந்திய அணி நித்தனாமாக் ஆடி வருகிறது. 9 ஓவருக்கு வெறும் 36 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுத்து இருக்கிறது.

Story first published: Saturday, June 22, 2019, 15:50 [IST]
Other articles published on Jun 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+