Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த இரண்டு பேர்.. மே.இ. தீவுகளின் கோட்டையை சல்லி சல்லியாக நொறுக்கிய இணை.. எப்படி நடந்தது?

Recommended Video

மே.இ.தீவுகளை சல்லியாக நொறுக்கிய இந்திய இணை

லண்டன்: மேற்கு இந்திய தீவுகள் என்ற பழைய பர்னிச்சரை இந்தியாவின் ஒரு பவுலிங் ஜோடி மொத்தமாக அடித்து நொறுக்கி இருக்கிறது.

அட.. அட இந்திய பவுலிங் பவுலிங்தான். பேட்டிங் போனா என்ன.. நாங்க இருக்கோம்.. என்று தானாக களமிறங்கி இந்தியாவை வெற்றிப்பாதையை நோக்கி நகர்த்தி இருக்கிறார்கள் இந்திய அணியின் பவுலர்கள்.

எந்த பவுலரும் பஞ்சம் வைக்காமல் அதிரடியாக வியூகங்களை வகுத்து மேற்கு இந்திய படையை கவிழ்ந்துள்ளனர். அதிலும் மேற்கு இந்திய தீவுகளின் முக்கிய பேட்ஸ்மேன்கள் வீழ்ந்த விதம் என்பது இந்த உலகக் கோப்பை தொடரிலேயே நடக்காதது.

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

இந்திய அடித்தது என்னவோ 268 என்ற சொற்ப இலக்குதான். இதை மேற்கு இந்திய தீவுகளின் இரண்டு ஹிட் பேட்ஸ்மேன்கள் நினைத்து இருந்தாலே எட்டி இருக்க முடியும். ஆனால் இந்திய பவுலர்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆம் அதிலும் இந்தியாவின் ஸ்பீட் இணையான பும்ரா- சமி ஜோடி மேற்கு இந்திய தீவுகளின் பவுலர்களை நெம்பி எடுத்துவிட்டார்கள்.

முதல் போனி

முதல் போனி

ஷமி போட்ட 4வது ஓவரின் 5வது பந்தில்தான் ஆட்டம் இந்திய அணியின் கைக்குள் வந்தது. ஆம் சரியான லெந்தில் சரியாக பவுன்சர் போட்டால் அவுட்டாகி விடுவார், கெயிலுக்கு அதுதான் வீக்னஸ் என்பதை சரியாக கணித்து பந்து வீசினார் ஷமி. சரியான லெந்தில் சரியான வேகத்தில் அவர் போட்ட பந்தை, நிலைதடுமாறி சுற்றிய கெயில் சரியாக கேதார் ஜாதாவிடம் கேட்ச் கொடுத்தார். முதல் விக்கெட் விழுந்தது.

அடுத்த

அடுத்த

அடுத்த விக்கெட் 6வது ஓவரின் 5வது பந்தில் ஷமி மூலம் மீண்டும் எடுக்கப்பட்டது. மிக சரியாக பவுண்டரி அடித்த ஹோப்பை, சரியான வேகத்தில் யார்க்கர் பந்து போட்டு கவிழ்த்தார் ஷமி. ஆம், அந்த ஓவரில் அந்த விக்கெட் விழுந்த பின்தான் இந்திய ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார தொடங்கினார்கள். நல்லது போட்டி நம் பக்கம் வருகிறதை என்று நிம்மதி கிடைத்தது .

இரண்டு

இரண்டு

அடுத்து இரண்டு விக்கெட்டுகள் ஒரே ஓவரில் பும்ரா மூலம் எடுக்கப்பட்டது. 27வது ஓவரின் முதல் பால் பிராத்வைட் அவுட்டானார். அவர்தான் இந்த போட்டியில் இந்திய அணிக்கு தலைவலியாக இருப்பார் என்று கருதப்பட்டது. ஆனால் அவரை மிக எளிதாக 1 ரன்களில் சரியான லென்த் டெலிவரி மூலம் அவுட் செய்தார் பும்ரா. இவர் சென்ற போட்டியில் செஞ்சுரி அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை அவுட் செய்ய தோனி பிடித்த கேட்ச் பெரிய வைரலானது.

முடிந்தது

முடிந்தது

பும்ரா போட்ட அடுத்த பந்தே ஃபேபியன் அலென் அவுட்டனர். மிக சரியான லெந்தில் போடப்பட்ட இந்த பந்தில் அலென் எல்பிடபிள்யு ஆனார். இந்த போட்டியில் எடுக்கப்பட்ட கிளீன் எல்பிடபிள்யுகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

முடிந்த போட்டி

முடிந்த போட்டி

அதன்பின் மேற்கு இந்திய தீவுகளில் வலிமையான வீரராக ஷிம்ரான் ஹெட்மயர் மட்டுமே இருந்தார். ஆனால் அவரையும் ஷமி மீண்டும் 28வது வந்து அவுட் செய்தார். இதனால் மேற்கு இந்திய தீவுகள் மொத்தமாக நம்பிக்கையை இழந்தது. முக்கியமான வீரர்கள் எல்லாம் அவுட்டானதால் மேற்கு இந்திய தீவுகள் மொத்தமாக தோல்வியை நோக்கி நகரந்தது.. இந்த ஆட்டமும் இந்த இரண்டு பவுலர்களால்தான் இந்தியாவின் பக்கம் திரும்பியது.

Story first published: Thursday, June 27, 2019, 22:10 [IST]
Other articles published on Jun 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+