Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரின் அந்த ஒரு ஓவர்தான்.. இந்திய அணியை காப்பாற்றிய பும்ரா.. 28வது ஓவரில் என்ன நடந்தது தெரியுமா?

Recommended Video

WORLD CUP 2019 IND VS AFG | கதற விட்ட ஆப்கன், கடைசி ஓவர் வரை போராடி வென்ற இந்தியா!

லண்டன்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய வீரர் பும்ரா போட்ட ஒரு ஓவர்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

இந்தியா இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடிய போட்டிகளிலேயே இன்று நடந்த போட்டிதான் மிக மிக விறுவிறுப்பான போட்டி என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு இந்தியா ஆப்கானிஸ்தான் போட்டி பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்றது.

முக்கியமாக ஆப்கானிஸ்தான் பவுலிங்தான் இந்த போட்டி இத்தனை விறுவிறுப்பாக செல்ல காரணம் என்று கூட கூறலாம். ஆப்கானிஸ்தான் பவுலிங்கில் இந்திய வீரர்கள் மிக மோசமாக திணறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை

எத்தனை

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற ஆசைப்பட்ட கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மொத்தமாக 50 ஓவர் பிடித்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 224 ரன்கள்தான் எடுத்தது. அந்த அளவிற்கு ஆப்கானிஸ்தான் பவுலிங் மிகவும் வலுவாக இருந்தது.

எத்தனை

எத்தனை

முக்கியமாக இந்திய அணியின் ஸ்டார் வீரர்கள் எல்லோரும் மிக மிக மோசமாக ஆடினார்கள். இந்த உலகக் கோப்பையில் முதலில் பேட்டிங் இறங்கி இந்தியா அடித்த மிக குறைவான ஸ்கோர் இதுதான். இந்த போட்டியில் கே எல் ராகுல் 30 ரன்கள், ரோஹித் 1 ரன், கோலி 67, விஜய் சங்கர் 29, தோனி 28, ஜாதவ் 58 ரன்கள் மட்டுமே அடித்தனர்.

நன்றாக ஆடினார்கள்

நன்றாக ஆடினார்கள்

அதன்பின் களமிறங்க ஆப்கானிஸ்தான் வீரர்கள் நன்றாகவே ஆடினார்கள். தொடக்க வீரர்கள் நைப் மற்றும் சாசாய் நிதானமாக ஆடினார்கள். ஆனால் இவர்கள் 27 மற்றும் 10 ரன்கள் இருக்கும் போது வரிசையாக அவுட்டானார்கள். ஆனால் அதற்கு பின் இறங்கிய ரஹ்மத்தும் சஹிதியும் பார்ட்னர்ஷிப் போட்டு ஆடினார்கள். இவர்களை ஜோடியை பிரிக்க இந்திய பவுலர்கள் திணறினார்கள்.

அப்போது என்ன

அப்போது என்ன

அப்போதுதான் போட்டியில் டிவிஸ்ட் வந்தது.சரியாக 28வது ஓவரை பும்ரா வீசினார். ஓவரின் நான்காவது பந்தை சிக்ஸ் அடிக்க முயற்சி செய்து தூக்கினார் ரஹ்மத். பைன் லெக் திசையில் அந்த பந்து மேலே சென்றதை பார்த்து புயலாக ஓடி வந்த சாஹல் விழுந்து புரண்டு சரியாக அந்த கேட்சை பிடித்தார். 36 ரன்களுக்கு ரஹ்மத் அவுட்டானார்.

அடுத்த அவுட்

அடுத்த அவுட்

அதற்கு அடுத்து அதே ஓவரில் கடைசி பந்தில் இன்னொரு திருப்பம் நடந்தது. சஹிதி, பும்ரா போட்ட பவுன்சரில் நிலைகுலைந்து போனார். பந்தை எப்படி ஆடுவது என்று தெரியாமல் பேட்டை தூக்கினார். அவர் யோசித்து பார்க்கும் முன் அது பேட்டில் பட்டு சரியாக பும்ராவின் கையிலேயே போய் விழுந்தது. பும்ரா பாய்ந்து போய் சூப்பர் மேன் கேட்ச் பிடித்து அந்த விக்கெட்டை எடுத்தார்.

இதுதான்

இதுதான்

இந்த ஒரு ஓவரில் ஒரு ரன் கூட போகவில்லை. இந்த ஓவர்தான் மொத்த போட்டியையும் மாற்றியது. அதன்பின் வந்த ஆப்கானிஸ்தான் வீரர்களை பாண்டியாவும், சாஹலும் வரிசையாக வீட்டிற்கு அனுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 23, 2019, 3:07 [IST]
Other articles published on Jun 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+