Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாவ்.. செஸ் திறமையை வைத்து வீரர்களை கணித்தேன்.. அசத்தல் பவுலிங் ரகசியத்தை சொன்ன சாஹல்!

Recommended Video

WORLD CUP 2019: SA VS IND | செஸ் திறமையை வைத்து கணித்தேன்: சாஹல்- வீடியோ

லண்டன்: தன்னுடைய செஸ் விளையாடும் திறமையை வைத்து வீரர்களின் செயல்பாடுகளை கணித்து விக்கெட் எடுத்தேன் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தனது ஒரு உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தை ஆடி முடித்துவிட்டது. முதல் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது.

மிகவும் தீவிரமாக நடந்த இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியோடு தொடங்கி உள்ளது.

ஸ்கோர் என்ன

ஸ்கோர் என்ன

தென்னாப்பிரிக்கா முதலில் களமிறங்கி இந்திய பவுலிங்கில் திணறியது. டு பிளசிஸ் 38 ரன்கள் மற்றும் கிறிஸ் மோரிஸ் 42 ரன்கள் எடுத்தனர். கடைசியில் தென்னாபிரிக்கா 227 ரன்கள் எடுத்தது. அதன்பின் இந்தியா சார்பாக ரோஹித் சர்மா மட்டுமே 122 ரன்கள் அடித்தார். இந்திய அணி 47.3 ஓவரில் 4 விக்கெட்டிற்கு 230 ரன்கள் எடுத்து வென்றது.

எப்படி வெற்றி

எப்படி வெற்றி

இந்த போட்டியில் சாஹல் பவுலிங் இந்தியா அணியின் வெற்றிக்கு உதவியது. இதில் சாஹல், டு பிளசிஸ் விக்கெட் உட்பட 4 பேரின் விக்கெட்டை எடுத்தார். 10 ஓவரில் வெறும் 51 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை குலைத்தது சாஹல் பவுலிங்தான் என்று கூட சொல்லலாம்.

என்ன பேட்டி

என்ன பேட்டி

இந்த நிலையில் தான் எடுத்த விக்கெட்டுகள் குறித்து சாஹல் பேட்டி அளித்துள்ளார். அதில், நான் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக எடுத்த விக்கெட்டுகளில், டு பிளசிஸ் விக்கெட்தான் சிறப்பான விக்கெட். நான் ஆப் ஸ்டம்ப் பக்கம் பந்து போடலாம் என்று திட்டமிட்டு இருந்தேன். இதை டு பிளசிஸ் கணிப்பர் என்று நினைத்தேன். ஆனால் அவரால் அதை கணிக்க முடியவில்லை.

திட்டம்

திட்டம்

நான் ஒரு முன்னாள் செஸ் விளையாட்டு வீரர். எனக்கு அந்த போட்டி அமைதியையும், பொறுமையையும் கத்துக் கொடுத்தது. திட்டம் போடுவது எப்படி என்றும் சொல்லிக் கொடுத்தது. செஸ் விளையாடும் போது 16 -17 மூவ்களை நீங்கள் மனதில் ஏற்கனவே திட்டமிடவேண்டும். அப்படித்தான் நானும் திட்டம் போட்டேன்.

சூப்பர் பாஸ்

சூப்பர் பாஸ்

ஒரு வீரர் எத்தனை விதமான ஷாட்களை ஆட முடியும் என்பதை ஏற்கனவே கணித்து வைத்து இருப்பேன். ஒருவர் எப்படி எல்லாம் ஷாட் அடிப்பார். எப்படி போட்டால் ஷாட் அடிக்காமல் இருப்பார் என்பதை கணித்து வைத்துக் கொள்ளவேன். அந்த செஸ் திறமையை இதில் பயன்படுத்தினேன், அது நன்றாகவே பலன் அளித்தது, என்று சாஹல் தனது பவுலிங்கின் ரகசியத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Story first published: Friday, June 7, 2019, 18:07 [IST]
Other articles published on Jun 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+