For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதை எதிர்பார்க்க மாட்டாங்க.. ஆஸி அணியை வீழ்த்த போகும் செஸ் கேம்.. குல்தீப் - சாஹலின் மாஸ் பிளான்!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் குல்தீப் - சாஹல் ஜோடி வித்தியாசமான பவுலிங் அட்டாக் முறையை பயன்படுத்த இருக்கிறார்கள்.

Recommended Video

World Cup 2019 - ஆஸி அணியை வீழ்த்த போகும் குல்தீப்பின் செஸ் கேம் பிளான்

லண்டன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் குல்தீப் - சாஹல் ஜோடி வித்தியாசமான பவுலிங் அட்டாக் முறையை பயன்படுத்த இருக்கிறார்கள்.

உலகக் கோப்பை மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் உலகமே இன்று நடக்கும் உலகக் கோப்பை போட்டியைத்தான் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது.

இரண்டு முக்கியமான எதிர் எதிர் துருவங்கள் தங்களை களத்தில் இன்று சந்தித்துக் கொள்கிறது. இன்று நடக்கும் ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு இடையிலான லீக் போட்டி அதிக கவனம் ஈர்த்துள்ளது.

ஒரே பலம்

ஒரே பலம்

இதில் இந்தியா ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளுக்கும் ஒரே மாதிரி பலம்தான் இருக்கிறது. இரண்டு அணியின் பேட்டிங் ஆர்டரும் ஒரே மாதிரி இருக்கிறது. இந்திய அணிக்கு 4வது வீரர் பிரச்சனை என்றால், ஆஸ்திரேலிய அணிக்கு 3 வது வீரர் பிரச்சனை. மற்ற பேட்டிங் ஆர்டர் இரண்டு அணிக்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது.

பவுலிங் எப்படி

பவுலிங் எப்படி

அதேபோல்தான் இரண்டு அணிக்கும் ஸ்பீட் பவுலர்கள் பலமும் ஒரே மாதிரி இருக்கிறது. மிட்சல் ஸ்டார்க், பும்ரா இரண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பவுலிங் அட்டாக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இன்று பந்து வீசும் விதத்தை வைத்துதான் போட்டியின் முடிவுகள் மாறும்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் ஆஸ்திரேலியா அணியின் ஸ்பின் பவுலிங் வலுவானதாக இல்லை. இந்திய அணியில் நல்ல இரண்டு ஸ்பின் பவுலர்கள் இருக்கிறார்கள். குல்தீப் - சாஹல் ஜோடி மிகவும் வலுவான ஸ்பின் ஜோடியாக இருக்கிறது. இன்றைய போட்டியில் இவர்கள் முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்துவார்கள்.

எப்படி எடுக்கிறார்

எப்படி எடுக்கிறார்

ஏற்கனவே தன்னுடைய செஸ் விளையாடும் திறமையை வைத்து வீரர்களின் செயல்பாடுகளை கணித்து விக்கெட் எடுத்தேன் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார். ஒரு வீரர் எத்தனை விதமான ஷாட்களை ஆட முடியும் என்பதை ஏற்கனவே கணித்து வைத்து இருப்பேன். ஒருவர் எப்படி எல்லாம் ஷாட் அடிப்பார். எப்படி போட்டால் ஷாட் அடிக்காமல் இருப்பார் என்பதை கணித்து வைத்துக் கொள்ளவேன். அந்த செஸ் திறமையை இதில் பயன்படுத்தினேன், அது நன்றாகவே பலன் அளித்தது, என்று சாஹல் தெரிவித்துள்ளார்.

என்ன கற்றுக்கொடுத்தார்

என்ன கற்றுக்கொடுத்தார்

அது மட்டுமில்லாமல் இந்த முறை மூலம் எப்படி விக்கெட் எடுப்பது என்ற ரகசியத்தை அவர் குல்தீப் யாதவிற்கும் கற்றுக்கொடுத்து இருக்கிறார். வீரர்களை மூவ்களை கணித்து, அதற்கு ஏற்றபடி கணிப்பின் மூலமே எப்படி சரியாக பவுலிங் செய்வது என்று சாஹல் குல்தீப்பிற்கு கற்றுக்கொடுத்துள்ளார்.

உதவும்

உதவும்

இந்த செஸ் கேம் அட்டாக் ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய தலைவலியாக இருக்கும். இப்படி ஒரு பவுலிங் ஸ்டைலை அவர்கள் எதிர்கொள்ளவில்லை என்பதால், இது அந்த அணிக்கு பெரிய அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக கூட இருக்கலாம் என்கிறார்கள்.

Story first published: Sunday, June 9, 2019, 14:09 [IST]
Other articles published on Jun 9, 2019
English summary
ICC World Cup 2019: How Chess may be game changed in the IND match against Australia today match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+